சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துகள் மாயம்.. 12 ஆண்டுகளாக கணக்கு வழக்கும் இல்லை.. நீதிபதிகள் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. கோயிலின் சொத்துகளை மீட்பது, வருமானக் கணக்குகளை முறையாகப் பராமரிப்பது, புராதனக் கட்டிடங்களைப் பாதுகாப்பது எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் இந்தக் குழுவிடம் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இருப்பினும், இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

Chidambaram Natarajar Temple case

நீதிமன்றம் உத்தரவு

அப்போது கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், கடந்த 2014ம் ஆண்டு கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், பொது தீட்சிதர்கள் கோயிலுக்குள் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளால் புராதன சேதமடைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பழமையான கட்டிடங்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க வேண்டும் என்றும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுத்து, மாயமான மதிப்புமிக்க பொருள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முறையாக நிர்வகிக்கவில்லை

கடந்த 12 ஆண்டுகளாக கோயிலுக்கு வந்த வருமானம் தொடர்பான முழுமையான கணக்குகளைப் பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயிலின் புராதன கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மதச் சடங்குகள் மற்றும் மரபுகளின்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் பழம்பெருமையை மீட்டெடுக்க நிர்வாகக் குழு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

இதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிர்வாகக் குழுவுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு கிடைப்பதை நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயில், பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க கோயில், சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களின் சிறந்த கட்டடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. இங்கு சிவபெருமான், பிரபஞ்ச நடனமாடும் 'ஆனந்த தாண்டவ' கோலத்தில் தில்லை நடராஜராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+