சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைரலான "ஐபேக் சர்வே".. லீக்கான புகைப்படம்.. நந்திகிராமிலேயே மம்தாவிற்கு தோல்வியா?.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைவார் என்று ஐபேக் நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டதாக பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடந்து வருகின்றன. இதில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனை செய்து வரும் ஐபேக் நிறுவனம் நடத்தியதாக சர்வே ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இணையத்தில் உலவி வரும் இந்த சர்வே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கசிந்தது

கசிந்தது

ஐபேக் எடுத்த இன்டர்னல் சர்வே என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணினி ஒன்றில் இருக்கும் சர்வே ரிசல்டின் புகைப்படம் இப்படி கசிந்து உள்ளது. அதில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 30 மேற்கு வங்க தொகுதிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜக, திரிணாமுல் காங்கிரசின் வெற்றிவாய்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு

அதன்படி பாஜக இந்த 30 இடங்களில் 23 இடங்களை பெறும், திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 5 இடங்களை மட்டுமே பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபேக் நடத்திய சர்வே இது என்று கூறி இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. அதோடு நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கு தோல்வி அடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தோல்வி

தோல்வி

இவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிடும் சுவேண்டு அதிகாரி இங்கு வெற்றிபெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. இணையத்தில் லீக் ஆகி உள்ள இந்த சர்வே பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரசும், ஐபேக் நிறுவனமும் இந்த தகவலை மறுத்துள்ளது. இது போன்ற சர்வே எதுவும் எடுக்கப்படவில்லை.

நந்திகிராம்

நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதியிலும் திரிணாமுல்தான் ஜெயிக்கும். ஐபேக் இப்படி சர்வே எதையும் எடுக்கவில்லை.. இது முழுக்க பாஜக பரப்பும் பொய்யான வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

அதோடு இது போன்ற டெஸ்க்டாப் கணினிகளை நாங்கள் பயன்படுத்துவதே இல்லை. வதந்தியை பரப்பும் முன் கொஞ்சம் யோசித்துவிட்டு பரப்புங்கள்.. தேர்தல் முடிவின் போது இந்த சர்வே எவ்வளவு பொய்யானது என்று அம்பலம் ஆகிவிடும் என்று ஐபேக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
No, West Bengal CM Mamata is not losing Nandigram: I PAC internal survey is fake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X