முஸ்லிம் சிறுவன் தாக்குதலில் “திருப்பம்”- நடந்ததோ சென்னையில்.. செய்தது “வட இந்தியர்” - பகீர் பின்னணி
சென்னை: குல்லா அணிந்த காரணத்துக்காக 8 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் சிறுவனை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் முஹம்மது இக்லாஸ். 8 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், ரங்கராஜபுரத்தில் உள்ள ரஹீமா மசூதியில் குர்ஆன் மனனம் செய்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு 8 மணியளவில் மசூதியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முஹம்மது இக்லாஸ். அப்போது அவரை வழிமறித்த நபர் குல்லா ஒரு கேடா என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

சிசிடிவி
இது தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுவனின் சைக்கிளை இடிப்பது போல் வருகிறார். அப்போது வரை நோக்கி கோபமாக ஏதோ கத்தி அதட்டுவது பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவன் இக்லாஸ் தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.

போலீசில் புகார்
ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அனைவரும் சென்னை அசோக் நகர் காவல்நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை தெரிவித்து புகாரளித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தாக்கியவர் கைது
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிறுவனை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட நபரை இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில் சிறுவனை தாக்கிய நபரை இன்று அசோக் நகர் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

பகீர் பின்னணி
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஹரிலால் என்பதும், வட இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் பல ஆண்டுகளாக சென்னையில் செல்போன் நிறுவனத்தை இவர் சில ஆண்டுகளுக்கு முன் மசூதி முன்பாக தகராறில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. அவர் மீது இரு தரப்பிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications