சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% கொட்டித்தீர்த்த மழை - வானிலை மையம்

தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை 45 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என கணித்திருந்த நிலையில் 71 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 59% அதிக மழை அளவாகும்.

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப்பருவமழை காலமாகும். அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக மழை பொழிவு இருந்தாலும் நவம்பர் மாதம் முதலே மழையின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்பொழுதே 70 சதவிகிதம் அளவிற்கு மழை கூடுதலாக பெய்ததாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

டிசம்பர் மாதத்தில் சற்றே ஓய்வெடுத்த மழை இறுதியில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்து விட்டது. சென்னையில் பல பகுதிகளில் 20 செமீக்கு மேல் மழை அளவு பதிவாகியுள்ளது.

தமிழக தலைநகரமே ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Exclusive: நேற்று பெய்தது போலவே இன்றும் சென்னையில் பேய்மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில் Exclusive: நேற்று பெய்தது போலவே இன்றும் சென்னையில் பேய்மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில்

ஸ்தம்பிக்க வைத்த மழை

ஸ்தம்பிக்க வைத்த மழை

சென்னையில் நேற்று ஒரே நாளில் 10 மணி நேரம் மழை விடாமல் பெய்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. அங்கு மாட்டு 237.10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 230.80 மிமீ மழை பெய்துள்ளது. மேற்கு மாம்பலத்தில் 220 மிமீ மழை பெய்து உள்ளது. இந்த 3 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.

59% சதவிகிதம் அதிகம்

59% சதவிகிதம் அதிகம்

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய மழை அளவு 45 செ.மீ. என கணித்திருந்த நிலையில்,பெய்த மழை அளவு 71 செ.மீ. அதாவது இயல்பை விட 59% அதிக மழை ஆக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை எங்கு அதிகம்

மழை எங்கு அதிகம்

அதிகபட்சமாக,விழுப்புரம் மாவட்டத்தில் 119 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால்,அங்கு பெய்ய வேண்டிய மழை அளவு 55 செ.மீ. மட்டுமே,ஆனால் பெய்த மழை அளவு 121 செ.மீ. என குறிப்பிடப்பட்டுள்ளது.

74 செமீ அதிக மழை

74 செமீ அதிக மழை

சென்னையைப் பொறுத்தவரை பெய்ய வேண்டிய மழை அளவு 78 செ.மீ மட்டுமே ஆனால் 136 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இயல்பை விட 74 செ.மீ. அதிகமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
According to the Chennai Meteorological Department, the northeast monsoon in Tamil Nadu and Puthuvai received 59% more rainfall than normal this year. 45 cm from October 1st to December 30th 2021. 71 cm of rainfall was forecast. Heavy rainfall has been reported. This is 59% more rainfall than normal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X