பொது வேட்பாளராக சீமான்.. திமுகவுடன் டீல் முடிந்துவிட்டதா? குழப்பத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பொது வேட்பாளர் பேச்சால் அக்கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர். ஏனென்றால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்தே இத்தனை நாட்கள் அரசியல் செய்து வந்த நாதக, அவர்களின் ஆதரவுடன் சீமான் வென்றால் சரியாக இருக்குமா என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்குகிறார். அம்பாசமுத்திரம் தொகுதியில் திடீரென பொது வேட்பாளராக என்னை திமுக, அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. பின்னர் பேசலாம் என்று சுருக்கமாக பதில் அளித்தனர்.

Seeman NTK By Election

இதனால் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவாரோ என்ற சந்தேகம் அக்கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனால் அம்பை தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்குவதற்கான பணிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சீமானை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதுதான் தவெகவின் விருப்பமாக உள்ளது.

திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் இணைந்தால் தான் விஜய்யை வீழ்த்த முடியும்.. விஜய் அவ்வளவு வலிமையானவர் என்று சொல்வதற்காக தவெக தயாராகி வருகிறது. இதனிடையே பொது வேட்பாளர் விவகாரத்தில் நாதக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் 16 ஆண்டுகளாக சீமான் திமுக, அதிமுகவை தான் விமர்சித்து அரசியல் செய்து வந்துள்ளார்.

தற்போது பொதுத்தேர்தல் கூட அல்லாமல் ஒரு இடைத்தேர்தல் வெற்றிக்காக இரு திராவிட கட்சிகளின் ஆதரவை பெற சீமான் தீவிரமாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை திமுகவுடன் ஏற்கனவே சீமான் பேசிவிட்டாரா? நாதகவில் என்ன நடக்கிறது? என்பதே பலருக்கும் கேள்வியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அம்பை தொகுதியில் சீமானை திமுக ஆதரித்தால், மற்ற தொகுதியில் நாதக களமிறங்காதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எந்தவித பலனும் இல்லாமல் திமுக, அதிமுக ஏன் நாதகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. இதனால் நாதக பொதுக்குழுவை கூட்டி இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+