வீடு தேடி சென்ற போதும்.. யாருமே பொது வேட்பாளராக ஏற்கவில்லையே.. சோகத்தில் இருக்கும் சீமான்!
சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான், பல்வேறு கட்சித் தலைவர்களையும் வீடு வீடாக சென்று தன்னை பொது வேட்பாளராக ஏற்க ஆதரவு கோரி இருக்கிறார். ஆனால் சீமானை பொது வேட்பாளராக ஏற்கும் எண்ணத்தில் யாரும் இல்லை. இதனால் சீமான் சோகத்தில் இருப்பதாக அவரது கட்சியினர் பேச தொடங்கி இருக்கின்றனர்.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடியாத சீமான், அம்பை தொகுதியில் களமிறங்கும் திட்டத்திற்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதன் பின்னணியில் சீமானின் பொது வேட்பாளர் திட்டம் தான் முக்கிய காரணம்.

அதேபோல் நாடார் மற்றும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று சீமான் நம்புகிறார். சீமான் மீதான செண்டிமெண்ட் மக்களிடையே எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே தன்னை வேட்பாளராக அறிவித்த பின் பல்வேறு கட்சிகளும் பொது வேட்பாளராக ஏற்பார்கள் என்று சீமான் நம்பினார்.
குறிப்பாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் ஆதரிப்பார்கள் என்று கருதினார். ஏனென்றால் காவிரி விவகாரத்தில் அவர்களுடன் சீமான் நெருக்கமாக இருந்தார். அம்பை வேட்பாளராக அறிவித்து கொண்ட பின், சீமான் அவர்களின் வீடு தேடி சென்று ஆதரவு கோரியதோடு பொது வேட்பாளராக ஏற்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருக்கிறார்.
ஆனால் சீமானை பொது வேட்பாளராக எந்தக் கட்சியும் ஏற்க முன் வரவில்லை. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. முக்குலத்தோர் வேட்பாளரை இறக்க இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளன. எந்த கட்சியும் தன்னை பொது வேட்பாளராக ஏற்காததால், சீமான் சோகத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதனால் நாம் தமிழர் கட்சியினரும் சோகம் அடைந்துள்ளனர். இதனால் அம்பை தொகுதியில் நாதகவின் கட்டமைப்பை நம்பியே சீமான் களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து நாதக நிர்வாகிகள் அம்பை தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வரவழைக்கப்பட உள்ளனர். இதனால் அம்பை தொகுதியில் இப்போதே தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications
