நுங்கம்பாக்கத்தை வாட்டும் மழை... 200 ஆண்டுகள் பெய்த மழை அளவு...பிரதீப் ஜான் பட்டியல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 7ஆம் தேதி 215 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 1943ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இதே அளவு 215 மிமீ அளவிற்கு நுங்கம்பாக்கத்தில் பதிவானதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
சென்னை: நுங்கம்பாக்கத்தில் கடந்த 1943ஆம் ஆண்டு 550 மிமீ அளவிற்கு அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதே போல கடந்த 7ஆம் தேதி 215 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் நுங்கம்பாக்கத்தில் பதிவான மழை அளவினை பட்டியலிட்டுள்ளார் பிரதீப் ஜான்.
கடந்த சனிக்கிழமை மாலை சென்னையில் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மட்டும் 207 மிமீ மழை பெய்துள்ளது.

சராசரி மழை சாதனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 140 சென்டிமீட்டர் மழை பெய்யும். ஒன்று தென்மேற்கு பருவமழையின் போது அதிக மழை பெறும் அல்லது வடகிழக்கு பருவமழையின் போது அதிக மழை பெறும். இதனால் மழை அளவு 140 சென்டிமீட்டரை தாண்டுவது அதிசயம். ஆனால் இந்த முறை ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் 141 சென்டி மீட்டர் மழை பதிவாகி விட்டது.

அதிகபட்ச மழை
கடந்த 200 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் 24 மணிநேரத்தில் அதிகபட்சம் பெய்த மழையின் அளவுகளை பிரதீப் ஜான் கொடுத்துள்ளார். 1846ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் 550 மி.மீ மழை பதிவானது. 1857ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி 460 மி.மீ மழை பதிவானது. 1976ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி 452 மழை பதிவானது. 1996ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி 348 மிமீ மழை பதிவானது.

அதிக மழை பதிவு
1985ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதியன்று 329 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதியும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியும் 294 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. 1969ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று 280 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 2005 அக்டோபர் 27ஆம் தேதியன்று 273 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது.
Recommended Video

நவம்பர், டிசம்பர் மாத மழை
1091 டிசம்பர் 10ஆம் தேதி 262 மிமீ மழையும், 1985 நவம்பர் 12ஆம் தேதியன்று 249 மிமீ அளவிற்கு மழையும் பதிவானது. 2015 நவம்பர் 16ஆம் தேதி 247 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 1984 நவம்பர் 13ஆம் தேதியன்று 246 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 1952 ஆம் ஆண்டு மே மாதத்தில் 244 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை
1922ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி 236 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 2005 டிசம்பர் 3ஆம் தேதியன்று 234 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 1902ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி 233 மிமீ அளவிற்கு மழை பதிவானது. 1947ஆம் ஆண்டு மே 17ஆம்தேதியும் 2021 நவம்பர் 7ஆம் தேதியும் 215மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மட்டுமல்லாது கோடை காலத்திலும் நுங்கம்பாக்கம் பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் இந்த அளவிற்கு அதிக மழை பெய்வது ஏன் என்று வானிலை ஆய்வாளர்கள் காரணம் கூறினால் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications