ரேஸில் அடிபடும் ஓபிஆர் பெயர்.. இப்பவே துண்டு போட்ட தமிமுன் அன்சாரி.. 5 தொகுதிகளில் முந்தும் திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்குள் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் கணக்குகளைத் தொடங்கிவிட்டன. திமுகவும் களத்தில் இறங்க தயாராகிவரும் நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் யார், கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்..

O P Ravindranath

5 தொகுதி இடைத்தேர்தல்

அக்டோபர் 24-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனையில், தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. . தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், கட்சியின் தேர்தல் பணிகளை முன்கூட்டியே முடுக்கிவிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, 5 தொகுதிகளிலும் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பான பேச்சுகள் தொடங்கியுள்ளன. கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் லிஸ்ட்

திருச்சி கிழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூரில் அசோக்குமார், அம்பாசமுத்திரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் போட்டியிடலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் பெயரும் அடிபடுகிறது

இந்தப் பெயர்கள் தொடர்பான பேச்சுகள் ஒருபுறம் இருக்க, வேட்பாளர் தேர்வில் திமுக தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஷுக்கு சிக்கலா?

திருச்சி கிழக்கு தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுவார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிரான வழக்கும் கவனம் பெற்றுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது தொடர்பான பணப் பரிவர்த்தனை புகாரில் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதாவது அக்டோபர் 26-ம் தேதி தள்ளுபடி செய்துள்ளது.

இதனால், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில், அன்பில் மகேஷ் இடைத்தேர்தலில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டால், இந்த விவகாரம் தேர்தல் களத்திலும் பேசப்பட வாய்ப்புள்ளது.

ஓபிஆர் மகன் பெயர்

அம்பாசமுத்திரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடலாம் என்ற தகவலும் பேசப்படுகிறது. ஆனால், ஏற்கனவே அவரது மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக சட்டப பிரச்சனை ஏற்பட்டது. 2019-ம் ஆண்டு தேனி எம்பி தேர்தலில் அவரது வெற்றியை சென்னை ஹைகோர்ட் 2023-ல் செல்லாது என அறிவித்தது. பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தலில் ரவீந்திரநாத் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அம்பாசமுத்திரத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பாகவும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தவெகவின் கணக்கு

இந்த 5 தொகுதிகளிலும் தவெகவும் தனது அரசியல் கணக்குகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளதால், அவர்கள் மீண்டும் போட்டியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

குறிப்பாக, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளில் முன்னாள் எம்எல்ஏக்கள் மீண்டும் களமிறங்குவார்களா என்பது கவனிக்கப்படுகிறது. இப்படி திமுகவும் தவெகவும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு இந்த இடைத்தேர்தலில் முக்கியமான கட்டமாக இருக்கும்.

தமிமுன் அன்சாரிக்கு சீட் கிடைக்குமா?

இப்படியான சூழலில்தான் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தங்களது கட்சிக்கு திமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமீமுன் அன்சாரி

இன்று செய்தியாளர்களிடம் தமீமுன் அன்சாரி பேசும்போது, "எங்களது கட்சியின் களப்பணி, தேர்தல் ஒருங்கிணைப்பு, மக்கள் ஆதரவு ஆகியவற்றை கூட்டணித் தலைமை அறிந்திருக்கிறது.. திமுக தலைமையிலான கூட்டணி சிறுபான்மைச் சமூக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.. அந்த ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தம், 5 தொகுதிகளிலும் திமுக தனது கட்சி வேட்பாளர்களையே நிறுத்துமா அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்குமா என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வி. உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட்டில் சில பெயர்கள் பேசப்பட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளையும் திமுக தலைமை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

மனிதநேய ஜனநாயகக் கட்சி

மனிதநேய ஜனநாயகக் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டால் போட்டியிடத் தயாராக இருப்பதாக தமிமுன் அன்சாரி வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.

இடைத்தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தமிமுன் அன்சாரியின் விருப்பத்தை திமுக தலைமை ஏற்குமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+