ஜெ. ஜாமீனுக்கு 100 கோடி அபேஸ்! இபிஎஸ் ஜெயிலுக்கு போனால்தான் உருப்படும்! போட்டுத் தாக்கிய புகழேந்தி!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிணை செலுத்த வேண்டுமென இபிஎஸ் அணியினர் 100 கோடி பணத்தை கேம்ப் போட்டு வசூல் செய்து தங்களது பைகளை நிரப்பி கொண்டனர் எனவும், எடப்பாடி பழனிச்சாமியை கொஞ்ச நாள் சிறையில் அடைத்தால் அதிமுகவும் தப்பிக்கும் என ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நீண்ட நாள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். 2017ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு புகழேந்தி
இந்நிலையில் ஜெயலலிதா சிறைக்கு போன போது சிலர் வசூல் செய்ததாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்," முதல்வர் வேட்பாளர் மற்றும் எதிர்கட்சி பதவி ஆகியவற்றை விட்டு கொடுத்த ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதிமுகவின் நிதியை 10 லட்சத்தில் இருந்து 5 கோடி வரை உயர்த்தியது ஓபிஎஸ்தான். கோடநாடு கொலை வழக்கில் திமுக ஆட்சியில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

கொடநாடு கொலை
குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அரசு தாமதமாக செயல்படுகிறது. பழனிச்சாமியை கொஞ்ச நாள் சிறையில் அடைத்தால் அதிமுகவும் தப்பிக்கும், கோடநாடு கொலை வழக்கும் தீர்வுக்கு வரும். கோடநாடு கொலை வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் இபிஎஸ் அழித்து விட்டார். உள்துறை அமைச்சரோ காவல்துறை உயர் அதிகாரிகளோ சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிடாதது மேலும் சந்தேகத்தை வலுபடுத்துகிறது.

வசூல் மன்னர்கள்
ஜெயலலிதாக்கு பிணை கொடுத்த புகழேந்தி தெருவில் செல்பவனா? ஜெயக்குமார் என்னை பார்த்து சொல்லட்டும். ஜெயலலிதாவை விடுவிக்க 100 கோடி பணத்தை அமைச்சர்கள் கேம்ப் போட்டு வசூல் செய்து தங்களது பைகளை நிரப்பி கொண்டனர் இபிஎஸ் கூட்டம். 100 கோடிக்கு 500 கோடி வசூல் செய்து விட்டனர்; வசூலில் ஈடுபட்ட அனைவரும் வசூல் மன்னர்கள். ஆட்சி போனதால் மாதந்தோறும் பெற்று வந்த வசூல் பணம் நின்றதால் தூக்கம் இன்றி இபிஎஸ் திரிகிறார்" என கடுமையாக விமர்சித்தார்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications