சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா கணக்கே வேற.. அது நடந்தாலும் ஓபிஎஸ்-க்கு ஆப்பு.. ‘புரட்சி முழக்கம்’ - ஷாக் ஆன பன்னீர் தரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை : ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இரட்டைத் தலைமை வேண்டும் எனக் கோரி சசிகலா ஆதரவை நாடி வருவதாகக் கூறப்படும் நிலையில், சசிகலா அதிமுகவில் ஒற்றைத் தலைமை நிச்சயம் எனப் பேசி வருகிறார்.

Recommended Video

    OPS மீது Jayakumar பகிரங்க குற்றச்சாட்டு! ADMK கூட்டத்தில் நடந்தது என்ன? | *Politics

    எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைப்பதற்காக பழைய பகையை மறந்து ஓபிஎஸ் சசிகலா தரப்பினரோடு பேசி வருவதாக கூறப்படும் நிலையில், சசிகலாவும் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

    அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி

    அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது என்றும் ஒற்றை தலைமையின் கீழ் நிச்சயம் அதிமுக வரும் என்றும் சசிகலா மீண்டும் பேசியிருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

     தலைமை மோதல்

    தலைமை மோதல்

    அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தன் வசம் ஈர்த்துள்ள எடப்பாடி பழனிசாமி, எப்படியாவது பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து விடவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    கட்சியில் பெரும்பான்மையான முக்கிய நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. இதனால், பாஜக மேலிட ஆதரவு வேண்டி டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். நேற்று ஓபிஎஸ் மதுரை வழியாக தனது சொந்த ஊரான பெரியகுளம் சென்றார். ஓபிஎஸ் செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்கள் தொடங்கி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டு வருகிறார்.

    சசிகலாவுடன்

    சசிகலாவுடன்

    மேலும், சசிகலா தரப்பின் ஆதரவைப் பெரும் வகையிலும் ஓ.பன்னீர்செல்வம் காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வலிமையைக் காட்ட வேண்டும் என்றால் சசிகலாவின் ஆதரவு தனக்கு உதவும் என ஓபிஎஸ் கணக்கு போட்டிருக்கிறார். சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுடன் ஓபிஎஸ் ஏற்கனவே பேசி வருவதாகவும், விரைவில் சசிகலாவை சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்பட்டது. சசிகலா ஆதரவைப் பெறுவதன் மூலம் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுவிடலாம் என முயற்சி செய்து வருகிறார் ஓபிஎஸ்.

    அரசியல் சுற்றுப்பயணம்

    அரசியல் சுற்றுப்பயணம்

    ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயண திட்டத்தை தொடங்கி இருக்கும் அதே நேரத்தில்ல், ஜெயலலிதாவின் தோழியாக, அதிமுகவில் அதிகார மையமாக விளங்கிய சசிகலாவும் சென்னையில் இருந்து தன்னுடைய சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இருவருமே அதிமுகவில் தங்களுடைய இருப்பை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருப்பதால், இரண்டு பேரும் ஏதேனும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     சசிகலா அரசியல் சுற்றுப்பயணம்

    சசிகலா அரசியல் சுற்றுப்பயணம்

    அரசியல் சுற்றுப்பயணமாக தனது வீட்டில் இருந்து பிரச்சார வாகனத்தில் திருத்தணிக்கு சென்ற வி.கே.சசிகலா அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இதுப்போன்ற தலைமை பிரச்னை எழுந்தது. அப்போது அதனை சரியாக கையாண்டு சரி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் தலைமை பிரச்னை எழுந்திருக்கிறது. இதையும் சரி செய்து மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து மக்களுக்கான ஆட்சியை கொடுப்போம். தற்போது அதிமுகவில் நிலவும் பிரச்னைகளை காண கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை தொண்டர்களின் உறுதுணையோடு சரி செய்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

    ஒற்றைத் தலைமை வரும்

    ஒற்றைத் தலைமை வரும்

    மேலும் பேசிய சசிகலா, மக்களிடையே, தொண்டர்களிடையே நல்ல வரவேற்பு எனக்கு இருக்கிறது. எனது தலைமையில் கட்சி இருக்க வேண்டும் என்றே தொண்டர்களும் விரும்புகிறார்கள். என்னுடைய அரசியல் சுற்றுப்பயணம் நிச்சயம் வெற்றி பெறும். என்னுடன் அதிமுக தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி இடையேயான பனிப்போரை கொண்டு மொத்த அதிமுகவும் அப்படியே இருக்கும் என எண்ணிட முடியாது. இது எங்களுக்கும் இருக்கும் பிரச்னை. இதனை நாங்கள் சரி செய்வோம். அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஒற்றை தலைமையின் கீழ் நிச்சயம் அதிமுக வரும் எனப் பேசியுள்ளார்.

    ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல்

    ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல்

    ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை கைப்பற்ற முயற்சிப்பதால் தான் சசிகலாவின் ஆதரவை நாடி வருகிறார். ஆனால், சசிகலாவும் அதிமுகவில் நிச்சயமாக ஒற்றைத் தலைமை வரும் எனப் பேசி வருவது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சசிகலா ஓபிஎஸ்ஸூடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றத் திட்டமிட்டால், அடுத்து சசிகலாவே பொதுச் செயலாளராக வர விரும்புவார். இதை எடப்பாடி பழனிசாமி கட்டாயம் ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனாலேயே அவர் சசிகலாவின் வருகையை துளியும் விரும்பவில்லை.

     ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி

    ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி

    அதிமுகவில் தற்போது தனக்கு எதிராக நடக்கும் சதியை உடைக்க சசியின் ஆதரவை நாடினால், அது தனக்கும் எதிர்காலத்தில் ஆபத்தைத் தேடித் தரும் என்கிற யோசனையும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்போலவே, சசிகலாவும் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், சசிகலாவின் ஆதரவை வெளிப்படையாக கோருவதிலும் ஓ.பி.எஸ் தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் திட்டம் எடுபடுமா அல்லது எடப்பாடி பழனிசாமியே கட்சியை முழுமையாகக் கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    While O Panneerselvam is reportedly in talks with Sasikala, Sasikala has repeatedly said that he has a responsibility to build the AIADMK and that the AIADMK will definitely come under a single leadership.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X