சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வண்டியை நேர அங்கேயே விடுங்க! இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க ஓபிஎஸ் போடும் திட்டம்! இனிதான் இருக்கு ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்

அதிமுகவில் என்னதான் ஆச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்பது போல கடந்த சில நாட்களாகவே அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். காரணம் திடீரென ஓபிஎஸ்க்கு சாதகமான சில நிகழ்வுகள் தான்.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இனி தாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற ரீதியில் இருந்தனர்.

கனமழையால் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு - 5 மாநிலங்களில் சுமார் 50 பேர் பலியான சோகம்கனமழையால் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு - 5 மாநிலங்களில் சுமார் 50 பேர் பலியான சோகம்

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரின் நம்பிக்கையை அடியோடு மாற்றி போட்டு உள்ளது. அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி தான் என உறுதியாக அடித்துச் சொன்ன நிர்வாகிகள் கூட கடந்த சில நாட்களாக எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருக்கின்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்த ஒன்றிய செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது திடீரெனவோ பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

இதனால் எடப்பாடி பழனிச்சாமி திறப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. ஒருபுறம் நீதிமன்றம் இன்னொரு புறம் ஆதரவாளர்களின் எண்ணிக்கை சரிவு என இருந்த நேரத்தில் உயர்நீதிமன்றம் விதித்த கெடு நிறைவடைந்தது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட நிலையில் அது அகற்றப்பட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கையில் சாவி இருக்கிறது. ஆனாலும் அதிமுக பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது வரை தொடர்கிறார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வாயில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்லலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர இருக்கிறது இதற்கான முன்னேற்பாடுகளில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருக்கும் தகவல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இதனால் என்ன செய்யலாம் என யோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அடுத்தகட்ட திட்டம்

அடுத்தகட்ட திட்டம்

அதே நேரத்தில் ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்களும் வரும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எது எப்படி எனும் நாளை உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி வருகிறதோ அதனை பொருத்த எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர்.

English summary
O Panneerselvam is said to be planning a major move along with his supporters to give a shock treatment to Edappadi Palaniswami who has been facing successive setbacks in the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X