என்னதான் இரும்புன்னாலும் வலிக்குதுங்க.. ஒரு விஷயத்துக்குதான் அமைதியா இருக்கேன்- கலங்கிய ஓபிஎஸ் மகன்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ஜெயபிரதீப், என்னதான் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது, கட்சியினரை விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவால் அமைதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அதிரடி
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். நேற்று கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

ஓபிஎஸ் மகன்கள்
இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இன்னொரு மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜெயபிரதீப் அறிக்கை
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.பி.ஜெயபிரதீப், "அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து, யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும்போது என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது.

தர்மத்தின் பாதையில்
2001ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன். எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு, தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்!" என ஜெயபிரதீப் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications