சான்ஸே இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு கிடுக்குப்பிடி போடும் ஓபிஎஸ்.. நாளையேவா? கேம் ஓவரா?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் 2 நாட்களுக்கு விசாரணை நடக்க உள்ள நிலையில் நாளை காலை ஓ பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. வழக்கு விசாரணை நாளை மறுநாள் நடக்க உள்ளது. கன்னித்தீவு கதை போல கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மோதல் இப்போது வரை முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.
கிட்டத்தட்ட கடந்த 6 மாதமாக மோதலுக்கு இடையிலேயேதான் அதிமுகவின் காலம் கடந்துவிட்டது. ஓபிஎஸ் ஒரு வழக்கு, எடப்பாடி ஒரு வழக்கு, இவருக்கு ஆதரவாக தீர்ப்பு, அவருக்கு ஆதரவாக தீர்ப்பு, அதை மேல்முறையீடு என்று மாறி மாறி வழக்குகளால் அதிமுகவில் காலம் கழிந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது வழக்கில் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தீவிரம் அடைந்து உள்ளது.
காரணமே சொல்லாம மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்றீங்க..

என்ன வழக்கு
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. பொதுக்குழு செல்லும் என்று முன்னதாக உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக, இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார்.

விசாரணை
இந்த வழக்கில் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தொண்டர்கள் விருப்பத்தின் அடிப்படையில்தான் பொதுக்குழு கூடியது. அவர்கள்தான் ஒற்றை தலைமை வேண்டும் என்றனர்.அதனால், அவர்கள் வைத்த கோரிக்கையால்தான் பொதுக்குழு கூடியது. இதற்காக நோட்டீஸ் கூட வழங்கினோம். ஆனால் அவர்கள் வரவில்லை. அதோடு பொதுக்குழு நடக்கும் நாளில் அதிமுக அலுவலகத்தை இவர்கள் சூறையாடி உள்ளனர். அவர் கட்சிக்கு தலைமை ஏற்கும் தகுதியே இல்லாதார் என்று எடப்பாடி கட்டமாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ஓ பன்னீர்செல்வம் ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டார்.

வழக்கு விசாரணை
எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இதில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனது பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த பதில் மனுவை தாக்கல் செய்ய தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு பதில் மனு தாக்கல் செய்ய 1 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதாவது நாளை மறுநாள் வரை வழக்கில் இவருக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் விசாரணை நடக்க உள்ளதால் நாளை ஓ பன்னீர்செல்வம் இந்த பதில் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதில் மனுவிற்கு பின்பாக வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி
கடந்த முறை விசாரணையின்போது, வழக்கை தள்ளி வைக்க வேண்டாம். உடனே விசாரியுங்கள். உடனே வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது.ஓ பன்னீர்செல்வம் அளிக்க உள்ள பதிலில், பின்வரும் வாதங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது.

வாதங்கள் என்ன?
பொதுக்குழுவே தவறாக கூடி உள்ளது. அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தவறு என்று கூற வேண்டும். அதேபோல் கட்சி ரீதியான விதிகளை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. நான்தான் ஒருங்கிணைப்பாளர், அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும், என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு இன்னும் சில வாரங்களுக்கு அல்லது நாட்களுக்கு விசாரணை செய்யப்படலாம்.

தீர்ப்பு
வழக்கின் தீர்ப்பை பொறுத்த அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும். ஒருவேளை தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக முடிவு வந்தால், அதிமுகவில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் செல்லும். அதாவது அதிமுகவின் ஒற்றை தலைமையாக அவர் உருவெடுப்பார். அதே சமயம் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அவர் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் ஆவார். அப்படி ஆகும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச்செயலாளர் பதவி தானாக பறிக்கப்படும். அவர் எடுத்த முடிவுகளும் செல்லாது என்று அறிவிக்கப்படும். இதன் மூலம் அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை பிரச்சனை தலை தூக்கும்.