ஓமிக்ரான் : பள்ளி, கல்லூரிகளில் இதை கட்டாயம் பின்பற்றுங்க - பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை
ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.
சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 415 பேரில் 115 பேர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 108 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, கேரளாவில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 31 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு இதுவரையில் ஏற்படவில்லை.
என்றாலும், ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
நாட்டில் தற்போது வரை டெல்டா வகை கொரோனா தொற்று பரவல்தான் அதிகமாக உள்ளது. டெல்டா வகை தொற்றைவிட ஒமைக்ரான் வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1.5 முதல் 3 நாட்களுக்குள் இரட்டிப்பாகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலின் 4வது அலையை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பரிசோதனை - பாதிப்பு விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தயார் நிலையில் இருக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். மேலும் வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது. கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications