அடுத்த மாதம் பாருங்க! தினமும் பல லட்சம் ஓமிக்ரான் கேஸ்கள்.. இந்தியாவை எச்சரித்த எக்ஸ்பர்ட்.. ஆனால்!
சென்னை: இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து மூன்றாம் அலை உச்சம் பெறும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் ஓமிக்ரான் பரவலால் உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவில் தினமும் 8 -10 லட்சம் கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் நேற்று மட்டும் 141,374 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 35,367,760 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமூக ரீதியாக பல லட்சம் பேருக்கு ஏற்கனவே ஓமிக்ரான் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போது 484,471 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா ஓமிக்ரான்
இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து மூன்றாம் அலை உச்சம் பெறும் என்று அமெரிக்காவின் மருத்துவ வல்லுனரும், முன்னணி மருத்துவ நிறுவனமான Institute for Health Metrics and Evaluation அமைப்பின் இயக்குனரும், University of Washingtonல் மருத்துவ பிரிவு சேர்மேனுமான கிறிஸ்தோபர் முர்ரே பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியா புதிய கொரோனா அலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலை.

ஓமிக்ரான் கேஸ்கள் இந்தியா
கடந்த முறை டெல்டாவின் போது ஏப்ரல் மாதம் கடந்த வருடம் உச்சம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கேஸ்களை விட இப்போதுதான் அதிக அளவு கேஸ்கள் ஏற்பட போகிறது. ஆம் டெல்டாவில் உச்சம் ஏற்பட்ட போது ஒரே நாளில் 4 லட்சம் கேஸ்கள் பதிவானது. அதை விட அதிகமாக கேஸ்கள் பதிவாக போகிறது. அடுத்த மாதம் இந்தியாவில் தினமும் 5 லட்சம் கேஸ்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவை விட ஆற்றல் குறைவானது.

கொரோனா இந்தியா
ஓமிக்ரான் அவ்வளவு ஆற்றல் கொண்டது இல்லை என்பதால் அச்சப்பட வேண்டியது இல்லை. பெரும்பாலும் ஓமிக்ரான் பரவல் காரணமாக தினசரி கேஸ்களில் இந்தியா புதிய ரெக்கார்ட் படைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த மாதம் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகும். ஆனால் மக்கள் தீவிரமாக பாதிப்பு அடைவது என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். எங்களிடம் இருக்கும் மாடல்களின்படி அடுத்த மாதம் இந்தியாவில் தினசரி கேஸ்கள் 5 லட்சம் என்ற உச்சத்தை தொடும்.

இந்தியா கொரோனா வைரஸ்
அதன்பின் கேஸ்கள் படிப்படியாக குறையும். மக்கள் பலர் இந்தியாவில் ஏற்கனவே வேக்சின் போட்டு உள்ளனர். அதேபோல் பலருக்கு ஏற்கனவே கொரோனா வந்துவிட்டு சென்றுவிட்டது. இதனால் அவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இந்த எல்லா எதிர்ப்பு சக்தியும் சேர்ந்து ஓமிக்ரான் வீரியத்தை குறைத்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுதான் நடந்தது. தற்போது இந்தியாவிலும் இதுதான் நடக்கிறது.

ஓமிக்ரான் கொரோனா 3ம் அலை
ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. ஒரு வைரஸ் வேகமாக பரவினால் அது கண்டிப்பாக புதிய உருமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வகை கொரோனாவை ஏற்படுத்தும். ஆனால் இப்போதே அந்த புதிய வகை கொரோனா பரவும் என்று கூறிவிட முடியாது. இப்போது ஓமிக்ரான்தான் உலகம் முழுக்க ஆதிக்கம் மிக்க கொரோனாவாக உள்ளது. வரும் நாட்களில் ஓமிக்ரான் பரவலால் உருவான உருமாறிய வகை கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்று கிறிஸ்தோபர் முர்ரே பேட்டி அளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications