Gem Veeramani: சிறுமி தற்கொலை! ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 16 வயது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தாய் அளித்த புகாரின் பேரில் வீரமணி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.

ஜெம் வீரமணி நீண்டகாலமாக சிறுமிகளை படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களை வீட்டிற்க வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த புகாரின் பேரில் அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

gem veeramani case

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. "வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் என தைரியமாக புகார் கொடுக்கலாம். புகார் கொடுப்போரின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும்" என எஸ்ஐடி அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது ஏழ்மை சூழலை ஜெம் வீரமணி பயன்படுத்திக் கொண்டார்.

எனது 16 வயது மகளை படிக்க வைப்பதாக கூறி 2016 ஆம் ஆண்டு முதல் மகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுளளார். இதனால் மனமுடைந்த என் மகள், 2024 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்போதே நான் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

ஆனால் வீரமணி செல்வாக்கான நபர் என்பதால் என் புகார் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர். எனது புகாரின் நிலை குறித்து காவல் நிலையத்தில் விசாரித்தேன். அப்போது, "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்த போது அந்த புகார்கள் எரிந்து நாசமானதாக" போலீஸார் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கண்ணீருடன் திரும்பினேன். ஆனால் தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே எனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு காரணமான வீரமணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

தாயின் புகாரின் பேரில் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+