கொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா பரவல் உச்சத்திலிருந்து தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அறிவித்துள்ளது.

 One person died due to Corona and 462 tested positive In Tamilnadu

இது வரை தமிழ்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,478ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 473 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அறிவித்துள்ளது. 3,997 பேர் மட்டுமே தற்போது கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார். அதேபோல தலைநகர் சென்னையில் இன்று 167 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 50,209 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+