இப்போதாவது சொல்லுங்க உதயநிதி ஸ்டாலின்.. நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்போதாவது நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு அச்சத்தால் 20 மாணவர்கள் உயிரிழந்ததற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்ரும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இந்த நிலையில் குடியரசுத் தலைவரிடம் இருந்த நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 9ஆம் தேதி அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை தொடர்பான பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக தரப்பில் நீட் தேர்வு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டனர். இப்போது மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், மழுப்பலான பதில் தேவைப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி
அதற்காகதான் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருக்கிறது என்றார். அந்த ரகசியத்தை இப்போதாவது வெளிப்படுத்தலாம்.
எங்களை கிண்டல் செய்தார்கள்
இன்னும் எத்தனை நாட்களுக்குதான் மக்களை ஏமாற்றுவீர்கள்.. தங்களின் தவறை மறைக்கவே அனைத்து கட்சி கூட்டம். அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினோம், சட்டப் போராட்டம் நடத்தினோம். அப்போது கிண்டல் செய்தார்கள். நீட் தேர்வு காரணமாக 20க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
அனைத்து கட்சி கூட்டம்
வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதற்காக திமுக இந்த நாடகத்தை நடத்துகிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்போமா என்பதை வரும் நாட்களில் அறிவிப்போம். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்!












Click it and Unblock the Notifications