சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக வெர்சஸ் பாஜக இல்லை.. அதிமுகதான்.. அண்ணாமலைக்கு ஓபிஎஸ் பதிலடி.. அப்போ 2024 கூட்டணி?

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஓராண்டு காலமாக சட்டசபைக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவே விளங்குகிறது என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே திமுக வெர்சஸ் பாஜக என்ற ஒரு கருத்தை பாஜக நிர்வாகிகள் முன்னெடுத்து வருகிறார்கள். சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜக என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். அதே வேளையில் நாம் தமிழர் கட்சிதான் உண்மையான எதிர்க்கட்சி என சீமான் கூறியுள்ளார்.

'இருக்கு.. ஆனா இல்லை' பாணியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விவகாரத்தில் பேசுவதா? ஓபிஎஸ் கண்டனம் 'இருக்கு.. ஆனா இல்லை' பாணியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விவகாரத்தில் பேசுவதா? ஓபிஎஸ் கண்டனம்

எதிர்க்கட்சி யார்

எதிர்க்கட்சி யார்

இந்த நிலையில் அதிமுக ஒரு போதும் எதிர்க்கட்சி என்கிற கடமையிலிருந்து மாறாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ள எதிர்க்கட்சி என மாயை பிரச்சாரம் செய்து வருகிறது என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள்

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஓராண்டு காலமாக சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவே விளங்குகிறது. ஆனால் எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின் தங்கியிருப்பது போன்ற மாயத்தோற்றம் சமீபகாலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

மக்களின் குறை

மக்களின் குறை

மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு நான் பல கடிதங்களை எழுதியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது தமிழகத்திலிருந்து அதிக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததற்கு காரணமே நாங்கள்தான் அதிமுக விமர்சித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அதிமுக- பாஜக இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் வெடித்து வருவதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணி அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
ADMK chief Organiser O Paneer Selvam says that AIADMK is the primary opposition party than any other parties in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X