ஒன்னே ஒன்னு..கண்ணே கண்ணு! வாரிசுக்காக வரிந்து கட்டி கிளம்பிய ஓபிஎஸ்! இபிஎஸ்க்கு எதிராக பறந்த கடிதம்!
சென்னை : ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் அண்மையில் கடிதம் எழுதி இருந்த நிலையில், பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களோடு அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினராக இருந்த ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
மேலும் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை எனவும் அவரது அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்து செய்யுமாறு மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்," கடந்த 11-ந்தேதி அதிமுகவின் ஒரு சில பொறுப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது ஒப்புதல் இல்லாமல் கூட்டியது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால் கட்சிகளின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டேன்.

புகார் அளிக்கப்பட்டுள்ளது
அவர்கள் கூட்டிய சட்ட விரோத கூட்டங்கள், நிகழ்வுகள், கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான கூட்டங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தானே அறிவித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி முதல் நிலை தேர்தல் இருந்து நீக்கி தங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை.

நிராகரிக்க வேண்டும்
அதனால் அது செல்லுபடி ஆகாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திர நாத்தை பொய்யான குற்றச்சாட்டு கூறி நீக்கியதாக தெரிவித்து உள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. ஆதலால் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த தொடர்பு மேற்கொள்ள வேண்டாம், எவற்றையும் நடைமுறை படுத்த வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."என கூறியுள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத்
இதனிடையே பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம்அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்," எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.அவர் கூட்டிய சிறப்பு பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அவரது கோரிக்கையையும், கடிதத்தையும் நிராகரிக்க வேண்டும்'' என கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு கடிதங்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா பரிசீலித்து வருவதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அவர் தனது முடிவு என்ன என்பது குறித்து தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா!












Click it and Unblock the Notifications