கட்சிய விட்டு தள்ளி வைக்குறேன்..யாரும் பேசக் கூடாது! ஓபிஎஸ் வெளியிட்ட அதிரடி உத்தரவு! புது ட்விஸ்ட்!
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கம் சேர்த்தல் என அடிக்கடி அதிரடி காட்டி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உள்ளிட்ட மேலும் 7 பேர் அதிமுவிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ், அவரது மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், அவரது ஆதவாளர்கள் என அடுத்தடுத்து நீக்கப்பட்டனர்.

அதிமுக மோதல்
மேலும் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடியிடன் ஓபிஎஸ் ஆதரவு பட்டியில் அளிக்கப்பட்ட நிலையில், முதலில் 18 பேரும், அடுத்ததாக 21 பேரும் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்
இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். தொடர்ந்து 14 மாவட்ட செயலாளர்கள் நியமனம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.
Recommended Video

அறிக்கைப் போர்
நேற்றுமுன்தினம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததோடு, துணை ஒருங்கிணைப்பாளர்களாக. கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உள்ளிட்ட மேலும் 7 பேர் அதிமுவிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீக்கம்
அதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம், மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால், முன்னாள் அமைச்சரும் அதிமுக இளைஞரணி செயலாளர் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன், அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சங்கரதாஸ், அதிமுக மாணவர் அணி செயலாளர் முன்னாள் எம்பியுமான விஜயகுமார், முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி, அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம், உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் எனவும், உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications