Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் 'கலவர' மேகம்.. அதிரிபுதிரி திட்டம் போடும் ஓபிஎஸ்.. கிருஷ்ணமூர்த்தி சொன்னதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் நிலவும் மோதலுக்கு மத்தியில், தற்போது தலைமைக் கழகம் தொடர்பாக மீண்டும் பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஓபிஎஸ்ஸின் தலைமைக் கழக வருகைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அதனைத் தகர்க்க பக்காவாக பிளான் போட்டு வருகிறது ஓபிஎஸ் டீம்.

அதிமுக தலைமைக் கழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று சென்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக, ஓபிஎஸ் தலைமைக் கழகம் செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார், அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார்.

இந்நிலையில், மீண்டும் டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50,000 தொண்டர்களுடம் ஓபிஎஸ் தலைமைக் கழகத்திற்கு வருவார் எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தென்படும் கலவர மேகங்கள்

மீண்டும் தென்படும் கலவர மேகங்கள்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நேற்று முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அதிமுக மோதலுக்கு மத்தியில் 72 நாட்களுக்குப் பிறகு ஈபிஎஸ் அங்கு சென்றதால், ஓபிஎஸ்ஸும் அங்கு செல்லத் திட்டமிட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் செல்ல இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்தார். ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று வரும்படி கூறியுள்ளது காவல்துறை.

ஈபிஎஸ் டீம் போலீசில் மனு

ஈபிஎஸ் டீம் போலீசில் மனு

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதிமுக அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழகம் வருவது என்பது சட்டவிரோதம். இதனால் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி-யிடம் மனு அளித்தார் ஜெயக்குமார்.

அவர் போனதுமே இவரும்

அவர் போனதுமே இவரும்

ஈபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் மனு அளித்துவிட்டுச் சென்றதுமே, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஜேடிசி பிரபாகர், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதால் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்து இருந்த நிலையில், இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மனு அளித்தார்.

தைரியம் இருந்தால்

தைரியம் இருந்தால்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்கு விரைவில் செல்லவுள்ளதால், அவர் வரும்போது பாதுகாப்பு அளிக்க டிஜிபியை சந்தித்து மனு அளித்தேன். ஓரிரு நாட்களில் பதிலளிப்பதாக டிஜிபி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, தைரியம் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி, நிரந்தர பொதுச் செயலாளராக தொண்டர்களை வைத்து தேர்வாகட்டும். பச்சோந்தி போல செயல்பட்டு முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு, சொந்த நலனுக்காக கட்சியை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

50000 தொண்டர்களுடன்

50000 தொண்டர்களுடன்

கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார். அவர் விரைவில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதிமுக என்ற கட்சியை பாதுகாக்க வேண்டியது ஓ.பன்னீர்செல்வத்தின் கடமை. அவர் எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார். விரைவில் 50,000 தொண்டர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வர இருக்கிறார்.

அதை அங்க கேளுங்க

அதை அங்க கேளுங்க

ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ, ஜெயக்குமாருக்கோ எந்தத் தகுதியும் இல்லை. திமுகவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கூட்டு என்று சொல்லும் ஜெயக்குமார், அந்த கேள்வியை கே.பி.முனுசாமியிடம் கேட்க வேண்டும். பெட்ரோல் பங்க் வைக்க, நிலம் குத்தகைக்கு எடுக்க திமுகவிடம் விலைபோனவர் கே.பி.முனுசாமி தான்.

ஒண்டவந்த பிடாரி

ஒண்டவந்த பிடாரி

நாடாளுமன்றத் தேர்தலில் தனது தொகுதியை திமுகவினருக்கு தாரைவார்த்துக் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார் முனுசாமி. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்தியது போல, ஒண்டவந்த பிடாரி எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டர்களாகிய எங்களை விரட்டப் பார்த்தால் அது நடக்காது. கட்சித் தொண்டர்களின் காலில் விழுந்து என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமி கெஞ்சும் நிலை வரும்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து ஸ்கெட்ச்

அடுத்தடுத்து ஸ்கெட்ச்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தலைமைக் கழகத்திற்குள் இனி விடவே கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால், தனது உரிமையை நிலைநாட்ட தலைமைக் கழகத்திற்கு சென்றே ஆகவேண்டும் என முடிவெடுத்துள்ளார் ஓபிஎஸ். இதனால் தான் விடாமல் காவல் நிலையம், டிஜிபி அலுவலகம் என மனு கொடுத்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு கிடைத்தால் ஓபிஎஸ் தலைமைக் கழகம் செல்வது உறுதியாகிவிடும். இதனால், கண்கொத்திப் பாம்பாக இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது ஈபிஎஸ் டீம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+