படத்தை நல்லா உற்று பாருங்க! பெரிய மிஸ்டேக் இருக்கு.. 10இல் ஒருவரே சரியான விடையை சொல்லி இருக்காங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் ஒரு தவறு உள்ளது. படத்தில் உள்ள மிஸ்டேக்கை 10 ல் ஒருவர் மட்டுமே குறிப்பிட்ட டைமிற்குள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களால் அந்த டைமிற்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் மூளையை கசக்கி பிழியவைப்பவை. சின்ன டிரிக்ஸ்களுடன் இந்த புதிர்கள் அமைந்து இருக்கும். இதனால், இதற்கான விடையை கண்டுபிடிப்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கும். ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் படத்தை கவனித்தால் விடையை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இல்யூஷன் படங்களை போலவே இதற்கும் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இது போன்ற புதிர் படங்கள் சில போட்டி தேர்வுகளில் கூட வைப்பதாக சொல்கிறார்கள். ஏனெனில் ஒருவரின் புத்தி கூர்மை, கவனிக்கும் திறன், சிந்தனை ஆற்றல் ஆகியவற்றை பொறுத்து இந்த இல்யூஷன் படங்களில் விடையை கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பொதுவாகவே இல்யூஷன் மற்றும் புதிர் படங்களை நெட்டிசன்கள் பலரும் தங்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் பகிர்ந்து விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம் என சேலஞ்ச் விடுக்கிறார்கள். யார் விடையை கண்டுபிடிக்கிறார்கள் என ஜாலியான ஒரு பொழுதுபோக்காக நெட்டிசன்கள், பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வைக்கும் விதமாக இந்த புதிர் படங்கள் அமைந்துள்ளன. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் கெட்டில் ஒன்றும் அருகே இரண்டு கப்களும் உள்ளன. ஒரு கப்பில் வட்ட வடிவிலான கேக் துண்டுகள் உள்ளன. மற்றொரு கப் காலியாக உள்ளது. இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என கண்டுபிடிப்பதுதான் டாஸ்க் என நினைக்க வேண்டாம். இங்கே உங்களுக்கு இருக்கும் டாஸ்க்கே வேறு.. அதாவது இந்த படத்தை நன்றாக பாருங்கள். மிகப்பெரிய மிஸ்டேக் ஒன்று உள்ளது. அதை 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ரொம்பவே ஈசியான புதிர் இது.. 7 செகண்ட் எல்லாம் தேவையில்லை.. 5 செகண்டில் கண்டுபிடித்துவிடுவோம் என பலரும் நினைப்பது புரிகிறது. எளிதாக விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். அப்படி கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். மிஸ்டேக் இருந்த மாதிரி இல்லையே.. எல்லாம் சரியாக இருக்கிறது என நினைப்பவர்கள் இன்னும் ஒரு 7 செகண்ட் எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள்.

இப்பவும் விடையை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பாத்திரங்களில் உள்ள கெட்டிலை நன்றாக பாருங்கள். அதில், மேக்சிமம் கெட்டிலின் அடிப்பகுதியிலும், மினிமம் கெட்டிலின் மேல் பக்கத்திலும் உள்ளது. இது அப்படியே தலைகீழாக இடம் பெற வேண்டும் என்பதுதான் சரியானது. இப்போ தெரிகிறதா? படத்தில் என்ன மிஸ்டேக் என்று.. விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்..












Click it and Unblock the Notifications