சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை இதுதாங்க.. மதுரையில் ப.சிதம்பரம் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தமிழ் வடிவத்தை தேர்தல் அறிக்கை குழுத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மதுரையில் இன்று வெளியிட்டார்.

டெல்லியில் ஏற்கனவே ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தமிழக மக்களுக்கு எளிதாகச் சென்று சேரும் வகையில் இந்த மொழியாக்க அறிக்கையை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழாக்கத்தை வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வயநாடு.. ராகுல் காந்திக்கு ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி.. சரியாக அடித்தால் சிக்ஸர்.. தவறினால் ஜீரோ! வயநாடு.. ராகுல் காந்திக்கு ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி.. சரியாக அடித்தால் சிக்ஸர்.. தவறினால் ஜீரோ!

தீயாய் பரவி விட்டது

தீயாய் பரவி விட்டது

2019 தேர்தல் அறிக்கை நாடு முழுக்க இரண்டே நாட்களில் தீயென பரவி விட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து பிரிவு மக்களுடைய கோரிக்கைகளை, தேவைகளை செவிமடுத்து ஒரு முழுமையான அறிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது என்பது நாடு முழுக்க பரவலான பேச்சாக உள்ளது. இன்று கூட ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் புகழ்பெற்ற சமூகவியல் வல்லுனர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

திருப்புமுனை

திருப்புமுனை

இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை இந்த தேர்தல் அறிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிக்கைக்கு கொடுத்த வரவேற்புக்காக இந்திய நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கையின், மையக் கருத்து என்பதை, திருக்குறளில் இருந்து ஒரு குரளை, சொல்லி கருத்தை விளக்க முற்படுகிறேன். இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு. செல்வத்தை ஈட்ட வேண்டும், பெருக்க வேண்டும், பிறகு செல்வத்தை பாதுகாக்க வேண்டும், பிறகு செல்வத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

செல்வம்

செல்வம்

இந்த நாடு செல்வம் மிகுந்த நாடாக மாற வேண்டும். அந்த செல்வம் எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது இந்த தேர்தல் அறிக்கையின், மையக்கருத்து. எங்களால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியை சொன்னதை செய்திருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ராகுல் காந்தி ஆற்றல்

ராகுல் காந்தி ஆற்றல்

புதிய தலைமுறையின் பிரதிநிதியாக ராகுல்காந்தி இன்று உருவெடுத்துள்ளார். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று தமிழ் பழமொழி உள்ளது. புதிய தலைமுறை, புதிய சிந்தனைகள், புதிய எண்ணங்கள், புதிய விஞ்ஞான அறிவு, புதிய தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆகியவை உள்ளன. அதை புதுமை என்று ஒதுக்கி விடக் கூடாது. அந்த புதுமையை இருகரம் கூப்பி வரவேற்க வேண்டும். அரவணைத்துக் கொள்ள வேண்டும். அந்த புதுமைதான், இந்தியாவுக்கு புது வழியை காட்டும். அந்த வகையில் ராகுல்காந்தி தலைமையில் செயல்படும் அரசு, இந்த தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றித் தரும் என்ற உறுதிமொழியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

சாத்தியம்

சாத்தியம்

சாத்தியமில்லாதவற்றை, நாங்கள் சொல்வது கிடையாது. சொல்வது சாத்தியம் என்று நம்பினால்தான் நாங்கள் சொல்லுவோம். அதேபோல்தான், ஒவ்வொரு வருஷத்திற்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கும் தலா 72 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

English summary
Former union minister P.Chidambaram has released Tamil version of Congress Manifesto in Madurai and today and says if Congress comes to power they will fulfill all the promises that the party has made.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X