இந்தோ திபெத் எல்லை போலீஸ் டிஜியாக தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமனம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகம் எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய இயக்குநர் ஜெனரல் மற்றும் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் இயக்குநர் ஜெனரலை நியமித்துள்ளது.
அமைச்சரவையின் நியமனக் குழு, இந்த நியமனத்திற்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1988ம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் சிங் தற்போது சிறப்பு எல்லை பாதுகாப்பு படை சிறப்பு எஸ்பியாக பணியாற்றுகிறார், அவர் எல்லை பாதுகாப்பு படை (டிஜி பிஎஸ்எஃப்) டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவார். 2022, டிசம்பர் 31 வரை இந்த பணியில் அவர் இருப்பார்.

1988ம் ஆண்டு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், தற்போது சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார். அவர், இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் டிஜி ஐடிபிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் ஆகஸ்ட் 31ல் பணி ஓய்வு பெறுவதால் சஞ்சய் அரோரா ஐபிஎஸ் அந்த பதவிக்கு, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐபிஎஸ் போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின், இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தற்போதைய போலீஸ் கமிஷனராக இருந்த எஸ்என் ஸ்ரீவஸ்தவா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி புதிய போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பை ஏற்க நியமிக்கப்பட்டவர்தான் பாலாஜி ஸ்ரீவஸ்தவ். பாலாஜி ஸ்ரீவாஸ்தவா 1988 கேடர் அதிகாரி. ஸ்ரீவஸ்தவ் டெல்லி காவல்துறையில் சிறப்பு காவல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
பாலாஜி ஸ்ரீவஸ்தவா புதுச்சேரி மற்றும் மிசோரம் காவல்துறை தலைமை இயக்குனராகவும், அந்தமான் மற்றும் நிகோபார் காவல்துறை கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications