சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன அழுத்தம் அச்சமின்றி பொதுத்தேர்வுகளை எதிர்க்கொள்ளுங்கள் - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டு கோலாக இருக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டு கோலாக இருக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தேர்வு எப்படி எழுதணும்... பிரதமர் சொன்ன அசத்தல் டிப்ஸ்!

    பொது தேர்வு எழுதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நான்காவது ஆண்டாக நடைபெற்றது.

    Pariksha Pe Charcha 2021: To face the exam without fear PM Modi interact with students

    கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உள்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு குறித்த அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று மாலை 7 மணியளவில் மாணவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன். தேர்வு மட்டுமின்றி, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேசுவோம் என்றார்.

    மாணவர்கள் வாழ்க்கை பயணத்தில் தேர்வு ஒன்றும் இறுதியல்ல என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கை மிக நீளமானது. தேர்வு என்பது சிறிய நிறுத்தம் தான். மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல. தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை

    தேர்வை கண்டு அச்சப்பட தேவையில்லை. மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள். முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். தேர்வுக்கான நேரத்தை சரிபாதியாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து பாடங்களுக்கும் கவனம் செலுத்துங்கள்.

    மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கூறினார் மோடி.

    தேர்வுக்கு தயாராகும் போது ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என பிரதமரிடம் மாணவர்கள் கேள்வி கேட்டதற்கு, தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது என பதிலளித்தார்.

    English summary
    Prime Minister Modi has advised students to face the exam without fear. He also advised teachers and parents about the exam.Pariksha Pe Charcha 2021. The interaction between PM Modi and students, teachers, and parents regarding the exam season had conducted on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X