சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. இனி வந்தாச்சு அடுத்த சிக்கல்! ரயில்வே முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மின் கசிவால் தீவிபத்து நடப்பதை தவிர்க்கும் வகையில் ரயில்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி இரவு நேரத்தில் துண்டிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 16-ம் தேதி முதல் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து விதமான பிளக் பாயிண்ட்களிலும் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது முழுமையாக இந்தியா முழுவதுமே நடைமுறைக்கு வந்துள்ளது.

செல்போன் அத்தியாவசிமயமான ஒன்றாகவிட்டது. எனவே நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ரயில் கம்பார்ட்மெண்டின் இருபுறங்களிலும் செல்போன்களை சார்ஜ் செய்ய பிளக் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து

விபத்து

இந்நிலையில் செல்போன்களை பலர் சார்ஜ் போடும் போது சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மிட்னகசிவு ஏற்பட்டு விபத்துக்களும் நேருகிறது. இதையடுத்து மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க பிளாக் பாய்ண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11 முதல் நிறுத்தம்

இரவு 11 முதல் நிறுத்தம்

ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போனை சார்ஜ் செய்ய அனுமதிக்ப்படமாட்டார்கள். சில ரயில்வே மண்டலங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் , இதுகுறித்து அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர-ஹசூர் ரயில் விபத்து காரணம்

பெங்களூர-ஹசூர் ரயில் விபத்து காரணம்

ஏன் இப்படி ஒரு முடிவினை ரயில்வே எடுத்துள்ளது என்றால், பெங்களூர-ஹசூர் சாஹிப் நான்தெத் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டது.இதன் காரணமாக 2014-ம் ஆண்டு ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிறுத்தப்பட்டது. ஆனால் கொஞ்சகாலத்திற்கு பிறகு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ரயில்வே முக்கிய உத்தரவு

ரயில்வே முக்கிய உத்தரவு

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தையடுத்து, இந்த உத்தரவை மீண்டும் செயல்படுத்தி உள்ளது ரயில்வே நிர்வாகம் டேராடூன்- சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 13-ம் தேதி திடீரென மின்கசிவு ஏற்பட்டு ராஞ்சி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் இன்ஜின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் உயிரிழக்கவில்லை. பாதிப்புஏற்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்றமுன்னெச்சரிக்கை அடிப்படையில் ரயில்களில் இரவு நேரங்களில் சார்ஜிங் பாயிண்ட்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Passengers on trains are not allowed to charge their cell phones from 11pm to 5am. According to railway officials, the decision was taken to prevent fires.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X