ஜெயலலிதாவின் ஓபிஎஸ் வெர்ஷன்! ’வெள்ளி’யைக் கொடுத்த கில்லி! உண்மையில் உயர்ந்ததா ஓபிஎஸ் செல்வாக்கு?
சென்னை : அதிமுகவில் தேவர் தங்க கவசம் தொடர்பான விவகாரத்தில் இரு தரப்புக்குமே ஏமாற்றம் அளித்த நிலையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஒன்றை அடித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். முத்துராமலிங்க தேவருக்கு அவர் அணிவித்திருக்கும் வெள்ளிக்கவசம் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் உண்மையில் தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா?
அக்டோபர் 30ஆம் தேதியான நேற்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், முன்ந்தாகவே அதிமுகவில் தேவரின் தங்க கவசம் தொடர்பாக மோதல் எழுந்தது. அதிமுகவின் இருதரப்புமே தங்க கவசத்தை பெற்று விட தீவிரமாக முயன்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்குமே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள், வருவாய் அலுவலர் தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தனர். இந்த மாதிரிதான் நடக்கும் என முன்னரே தகவல் வெளியாகிய நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை ரத்து செய்தார் எனவும் கூறப்படுகிறது.

தேவருக்கு வெள்ளிக் கவசம்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியே எதிர்பார்க்காத அளவு திடீர் அறிவிப்பு ஒன்றினை பசும்பொன் தேவர் ஜெயந்தி நாளான நேற்று காலையில் வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதாவது அதிமுகவில் தனது சார்பில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம் ஒன்றை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் வழங்குவதாகவும், பௌர்ணமி அமாவாசை மற்றும் சுப நாட்களில் இந்த கவசத்தை தேவருக்கு அணிவிக்கலாம் எனக் கூறி இபிஎஸ் மணிக்கு கிலியை ஏற்படுத்தினார். இந்த கவசம் அச்சு அசலாக ஜெயலலிதா வழங்கிய தங்க கவசத்தின் வெள்ளி வெர்ஷன் போலவே இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம்
தொடர்ந்து நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இந்த வெள்ளி கவசமும் அதிமுக சார்பிலே வழங்கப்படுகிறது என அதிரடியாக கூறினார் ஓபிஎஸ். வெள்ளிக்கவசம் மட்டுமல்லாது வெள்ளியிலான ருத்ராட்ச மாலையும் வழங்கப்பட்டது. தற்போது சுமார் 10.44 கிலோ எடை கொண்ட இந்த கவசம் மற்றும் மாலையின் மதிப்பு 9 லட்சத்து 12 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த கவசத்தை வழங்கும் போது சுமார் 100 கார்களில் ஆதரவாளர்களுடன் வந்து மாஸ் காட்டினர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் குமார்.

ஆதரவு அதிகரிக்குமா?
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தேவரின் தங்க கவசம் குருபூஜை நாட்களில் மட்டும் தேவருக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் வங்கி லாக்கரில் வைக்கப்படும். ஆனால் ஓபிஎஸ் தற்போது வழங்கியுள்ள வெள்ளிக்கவசம் தேவர் நினைவிடத்தில் அறங்காவலர் காந்திமீனா வாசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தேவர் நினைவிட நிர்வாகிகள் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிற அமைப்பினரின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருக்கும் என்கிறனர் சிலர்.

புறக்கணித்த இபிஎஸ்
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தேவர் சமூக அமைப்புகள் அதிமுக நிர்வாகிகளே அதிருப்தியில் இருக்கின்றனர். காரணம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு அவர் வருகை தர மாட்டார் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது அவர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் முதலமைச்சர் கூட கடைசி நேரத்தில் உடல் நல குறைவால் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி வரவே மாட்டார் என முன்னாலேயே கூறப்பட்டதால் அவர் பசும்பொன் வருவதை விரும்பவில்லை என்பதனை வெளிக்காட்டுவதாக கருதுகின்றனர்.

கட்சியில் கைகொடுக்குமா?
ஆரம்பத்தில் இருந்தே முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி புறக்கணித்து வருவதாகவும் கூறுகின்ற தென்மாவட்ட நிர்வாகிகள், இதனால் இயற்கையாகவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர்களது ஆதரவு இருக்கும் எனவும் வரும் நாட்களில் இந்த செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள். அதே நேரத்தில் சமூதாய ஆதரவு என்பது அதிமுகவில் நடக்கும் அதிகார மோதலில் ஓபிஎஸ்க்கு ஆதரவளிக்குமா? என்பது கேள்விக்குரிதான்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications