பட்டா மாறுதல் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு.. ஆர்டிஓ, தாசில்தார் பாஸ்வேர்டை வைத்து இப்படியா செய்வது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு உதவித்தொகை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவது ஒருபுறம், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் முறைகேடாக தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படுவது மறுபுறம் என அடுத்தடுத்து சம்பவங்கள் வெளியாகியுள்ளன. நாகையில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டையில் அரசு நிலங்களை முறைகேடாக பட்டா மாறுதல் செய்ததாக 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. என்ன நடந்தது நாகை, புதுக்கோட்டையில்??

நாகை மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஆவராணியைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மனைவி ரேணுகா (34), அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி செல்வம் (52), ரூ.7,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Government Land Scam RDO Password Tahsildar

நாகப்பட்டினம், புதுக்கோட்டை

உதவித்தொகை கொடுப்பதற்கும் லஞ்சம் தர வேண்டுமா என ரேணுகா அதிர்ந்துள்ளார்.. எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேணுகா, நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.7,500 பணத்தை செல்வத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலங்கள் முறைகேடாக தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவகாரமும் நேற்றைய தினம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சத்தியமங்கலம், இரும்பாளி பகுதிகளிலும் புதுக்கோட்டை நகரப் பகுதிகளிலும் அரசு நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

3 வருவாய் துறை ஊழியர்கள்

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றிய ரஞ்சித் (35), புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த பிரசன்னா (39), புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த லதா (38) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த முறைகேட்டில், ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட உயரதிகாரிகளின் இணையதள கணக்குகள் மற்றும் பாஸ்வேர்டுகள் அவர்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அரசு நிலங்களுக்கான பட்டா மாறுதல் நடைமுறைகளில் முறைகேடு நடந்த விதம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆட்சிக்கு தலைவலி

இந்நிலையில், ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் லஞ்சம், ஊழலை ஒழிப்பதாக தவெக உறுதியளித்திருந்தால், அரசு அலுவலகங்களில் அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய புகார்கள் அந்த வாக்குறுதியை செயல்படுத்துவது குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், லஞ்சப் புகார், அரசு நில பட்டா முறைகேடு போன்ற விவகாரங்கள் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகலாம். அரசு நிர்வாகத்தில் லஞ்சத்தையும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது முக்கியமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+