மக்களைத் தேடி மருத்துவம்..கடைக்கோடி மக்களையும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைக்கோடி மக்களையும் அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் கண்ணும் கருத்துவமாக கவனிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்புத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஊரக பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வா ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தொடங்கியது. திட்டங்களை மேம்படுத்துதல் குறித்த பரிந்துரைகளை பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பற்றியம் நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டம் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Pay close attention projects should reach the people says TN CM MK Stalin

மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக முதலமைச்சரை கொண்டு இந்த குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த மே மாதம் இந்த குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது 2வது கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் துணை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவிடம் முதன்மை செயலாளர், உறுப்பினர் செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையினை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மனித வளங்களின் செயல் திறனை வரிசைப்படுத்தி மதிப்பாறைவு செய்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் தடைகளை நீக்கி விரைந்து சட்டங்களை செயல்படுத்துவது அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்துவது அல்ல நடுநிலைப் படுத்துவதற்கு உரிய திருத்தங்களை செய்யவும் பரிந்துரைகள் வழங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது; மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சியை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்புத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+