லீவு முடிந்து சென்னை திரும்பிய மக்கள்... போக்குவரத்து நெரிசல் - சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு
4 நாள் தொடர் விடுமுறை முடிந்து ஏராளமான பொதுமக்கள் சென்னைக்கு திரும்பியதால், சுங்கசாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்த மக்கள் இன்று சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, வார விடுமுறை என 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து பொதுமக்கள் பலர் நேற்று சென்னைக்கு திரும்பியதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி மற்றும் அதனையொட்டிய பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

வழக்கமாக அரை மணிநேரத்தில் கடக்க வேண்டிய சாலையை, சுமார் ஒன்றரை மணிநேரம் ஊர்ந்தப்படியே வாகனங்கள் கடந்தன. இதே போன்று உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே பல்வேறு ஊர்களில் சென்னைக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வழக்கமாக 600 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், நேற்று ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதுபோன்ற தருணங்களில் போதிய அளவு அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது











Click it and Unblock the Notifications