தீபாவளிக்கு சொந்த ஊர் போக முடியாது போலயே! ராக்கெட் வேகத்தில் எகிறிய விமான கட்டணம்! சென்னை மக்கள ஷாக்
சென்னை: வரும் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே விமான டிக்கெட் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எப்போதுமே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் டிக்கெட் உச்சத்திற்குப் போய்விடும். இது தொடர்பாக மக்கள் புகாரளித்தால் அதன் பிறகே டிக்கெட் விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். விமான டிக்கெட் ரேட்டும் கிட்டத்தட்ட அதேபோலத் தான். ஒவ்வொரு முறையும் பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் தாறுமாறாக உயர்வது வாடிக்கையாகவே இருக்கிறது.

விமான டிக்கெட்
இன்றைய தினம் தீபாவளிக்காகப் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள். ஆனால், சாமானிய மக்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விமான டிக்கெட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து பல முக்கிய நகரங்களின் டிக்கெட் விலையும் உச்சத்திற்கு விற்கப்படுகிறது.
சென்னை டூ மேஜர் நகரங்கள்
சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.3500- ரூ.3800 வரை தான் டிக்கெட் இருக்கும். ஆனால், இன்றைய தினம் சென்னை-கோவை விமான டிக்கெட் ரூ.17,158 வரை போகிறது. குறைந்தபட்ச டிக்கெட்டே ரூ.12500க்கு மேல் தான் இருக்கிறது. நாளைய தினம் கூட சென்னை- கோவை டிக்கெட் குறைந்தபட்சம் ரூ.6500ல் இருந்தே தொடங்குகிறது.
அதேபோல சென்னை டூ மதுரை வழக்கமாக ரூ.3,100-3500 என்ற ரேஞ்சிலேயே விமான டிக்கெட் இருக்கும். ஆனால், இன்று அதன் டிக்கெட் குறைந்தபட்சமே ரூ.16,000ல் இருந்து தான் தொடங்குகிறது. அதிகபட்சம் ரூ.18000 வரை இருக்கிறது. நாளைய தினமும் மதுரைக்குக் குறைந்தபட்ச விமான டிக்கெட் கூட ரூ.13000க்கு மேல் தான் இருக்கிறது.
ரொம்ப அதிகம்
சென்னையில் இருந்து திருச்சி பொறுத்தவரை பொதுவாக ரூ.3500- 4000 வரை தான் டிக்கெட் இருக்கும். ஆனால், இன்று குறைந்தபட்ச டிக்கெட் கூட ரூ.10,300க்கு மேல் தான் இருக்கிறது. சராசரி டிக்கெட் விலை ரூ.15,233 வரை போகிறது. நாளை தினம் திருச்சி டிக்கெட் இன்னுமே மோசம். குறைந்தபட்ச டிக்கெட் விலையே ரூ.11000க்கு மேல் தான் இருக்கிறது.
சென்னை - தூத்துக்குடி ரூட்டிலும் வழக்கமாக ரூ.3,500 முதல் ரூ.3800 வரை தான் விமான டிக்கெட் இருக்கும். ஆனால், அதுவும் கூட இன்றைய தினம் ரூ.17,053 வரை போகிறது. நாளைய தினமும் குறைந்தபட்ச டிக்கெட் ரூ.8000க்கு மேல் தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் மட்டுமின்றி, நாட்டின் இதர முக்கிய விமான டிக்கெட்களும் அதிகமாகவே இருக்கிறது.
பல மடங்கு உயர்வு
சென்னையில் இருந்து டெல்லி வரை வழக்கமான விமான டிக்கெட் ரூ.5,800 முதல் ரூ.6000 வரை தான் இருக்கும். ஆனால், இன்றைய கட்டணமும் அது ரூ.30,414 வரை உச்சத்திற்கு போய்விட்டது. சென்னை - மும்பை சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.3,300-3400 என்றே இருக்கும் நிலையில், அதுவும் இப்போது ரூ.21,960 போய்விட்டது.
சென்னை- கொல்கத்தா சாதாரண நாட்களில் ரூ.5,200- 5400 என்று இருக்கும் நிலையில், இன்றைய தினம் விமான கட்டணம் ரூ.22,100க்கு போய்விட்டது. சென்னை ஹைதராபாத் விமான டிக்கெட் வழக்கமாக ரூ.2,900- 3100 வரை இருக்கும்.. ஆனால், இன்றைய கட்டணம் விமான டிக்கெட் ரூ.15,00 வரை போய்விட்டது. சென்னை- கவுகாத்திக்கு கூட இன்றைய தினம் விமான டிக்கெட் கட்டணம் ரூ.21,000 வரை போய்விட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications