பெரியகுளம் "சிட்டிங்" எம்எல்ஏக்கே இந்த நிலைமையா? "ஆடையின்றி" தோன்றிய நிர்வாண பெண்.. யாரென தெரிந்தது
சென்னை: திமுக எம்எல்ஏ என்றுகூட பாராமல், ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள்.. நிர்வாண வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதி நகரில், குடும்பத்துடன் வசித்து வருபவர் சரவணக்குமார். 48 வயதாகிறது.. பெரியகுளம் எம்எல்ஏவாக இருக்கிறார்.. தீவிரமான திமுகவின் அபிமானியும்கூட.

இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்திருக்கிறது.. அதனை சரவணக்குமார் ஆன் செய்தபோது, ஒருத்தருமே பேசலையாம்.. அதனால் போனை துண்டித்துவிட்டார்.
ஆபாச பேச்சு: பிறகு கொஞ்ச நேரம் கழித்து, எம்எல்ஏவின் செல்போனுக்கு மறுபடியும் ஒரு வீடியோ வந்திருக்கிறது.. அதில், வீடியோ கால் செய்த பெண்ணுடன், சரவணக்குமார் ஆபாசமாக பேசுவது போன்று தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது.. இதை பார்த்து எம்எல்ஏ அதிர்ந்துபோய்விட்டார். பிறகு பேசிய ஒரு மர்மநபர், கேட்கும் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவோம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்..
இதனால் மேலும் பதறிய எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட நபர் சொன்ன, வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். ஆனால், உடனடியாக இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றுகூறி, தேனி சைபர் கிரைம் போலீசாருக்கும் புகார் அளித்தார். இந்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்..
செக்ஸி வீடியோ: ஒரு எம்எல்ஏ என்றும் பாராமல், செய்த இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தேனியில் ஏற்படுத்தி வருகிறது. இந்த "செக்ஸி வீடியோவை" அனுப்பிய பெண் யார்? செல்போன் நம்பர் யாருடையது? பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண், இதெல்லாம் பற்றின விசாரணை கையில் எடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான இவருக்கு, கடந்த ஜூலை 1-ம் தேதியன்று இந்த வாட்ஸ்அப் வீடியோ கால் வந்துள்ளதாக தெரிகிறது..
மிரட்டல் பணம்: மிரட்டி பணம் கேட்ட வங்கி கணக்கிற்கு, ஜூலை 3-ம் தேதியன்று 5,000 ரூபாயும், 8-ம் தேதியன்று மேலும் 5,000 ரூபாய் என 10,000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் தொடர்ந்து அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அந்த நபர் செயல்பட்டு வந்ததால் பாதிக்கப்பட்ட சரவணக்குமார், தேனி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்போது, சைபர் கிரைம் போலீஸார் யார் அந்த ஆபாச வீடியோவை அனுப்பியது என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.. முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.. இதையடுத்து அவரை பிடிப்பதற்கு சைபர் க்ரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கே ஆபாச வீடியோக்கள் அனுப்பி பணம் பறிக்கும் கும்பலால், சாமானிய மக்கள் கதிகலங்கி போயுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications