பாஸ்போர்ட்டில் எழுதுற விஷயமா இது.. அரண்டு போன நெட்டிசன்கள்.. என்னன்னு பாருங்க!
சென்னை: மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட்டை டெலிபோன் டைரி போல ஒருவர் பயன்படுத்தியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் புதுப்பிக்க சென்ற போது டெலிபோன்கள் எண்களை எழுதி வைத்து இருப்பதை பார்த்து அதிகாரி திகைத்துள்ளார்.
இணையதளத்தில் அவ்வப்போது பல சுவாரசியமான விஷயங்களும் டிரெண்டிங் ஆகிவிடுகின்றன. பல வினோத சம்பவங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி இணையத்தில் அதிகம் பகிரப்படும். இந்த நிலையில், அதுபோன்ற ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. பாஸ்போர்ட்டை ஒருவர் டெலிபோன் டைரியாக உபயோகப்படுத்திய வீடியோதான் இணையத்தில் நெட்டிசன்களை கலகலப்படைய வைத்துள்ளது.

எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தனது பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், கேரளாவில் புதுப்பித்தலுக்காக கொண்டுவர்ப்பட்ட இந்த பாஸ்போர்ட்டை பார்த்த அதிர்ச்சியில் இருந்து உள்ள பாஸ்போர்ட் அதிகாரி இன்னும் மீளவில்லை என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் ஒருவர் கொடுக்கிறார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஸ்டாம்ப் குத்தப்படும் காலி பக்கங்களை ஒருவர் புரட்டி பார்க்கிறார்.
போன் நம்பர்கள்: ஆனால், அந்த காலிப்பக்கத்தில் வரிசையாக போன் நம்பர்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்திலும் சில கணக்குகள் போட்டு பார்த்து வைத்து இருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது.. எங்கு நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் ஜாலியாக தங்கள் பாணியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்த பாஸ்போர்ட்டை கொண்டு ஒருவர் பயணம் செய்ய முயன்றால் அதை பார்க்கும் அதிகாரியின் நிலைமையை யோசித்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், பாஸ்போர்ட்டை எடுத்தவருக்கு வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு ஏன் இந்த பக்கங்களை வேஸ்ட் செய்ய வேண்டும் என பயன்படுத்தி விட்டார் போல... என கலாய்த்துள்ளர்.
மகனை திட்டும் காட்சிகள்: சில நெட்டிசன்கள் கூறுகையில், பாஸ்போர்ட்டை தவறாக பயன்படுத்துவது குற்றம் என்றும் கூறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா இதேபோன்ற ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், தந்தையின் பாஸ்போர்ட்டில் சிறுவன் ஒருவர் படம் வரைந்து வைத்து இருந்தார். இதைப்பார்த்த தந்தை தனது என்ன செய்வது என சோகத்தில் மகனை திட்டும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
பாஸ்போர்ட்டை பொறுத்தவரை அரசாங்கம் அளிக்கும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் இன்றி பயணிக்க முடியாது. ஒருவரின் அடையாளம் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரம் பாஸ்போர்ட்டில் இடம் பெற்று இருக்கும். இந்திய குடிமகன் என்பதற்கான சான்றாகவும் பாஸ்போர்ட் விளங்குகிறது. வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் குடிமக்கள் பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications