ஒரு மாதமாக உயராமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. மக்களுக்கு நிம்மதி.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்று செய்யப்படவில்லை. பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 28-ந்தேதி ஓய்வெடுத்தது.

மக்களை வாட்டும் பெட்ரோல் விலை
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சதத்தை கடந்து சென்றது. இடையில் ஒரு நாள் கூட விலை குறையாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சமையல் எண்ணெய் விலை உயர்வு வேறு அதிகரித்து மக்களை கடுமையாக வாட்டியது.

விலை குறைந்தது
இவ்வாறு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 28-ந்தேதி ஓய்வெடுத்தது. அன்று முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 24 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலையில் தலா 16 காசு குறைந்திருந்தது.

விலையில் மாற்றமில்லை
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசும், டீசல் லிட்டருக்கு 35 காசும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

என்ன காரணம்?
புல்லட் ரயிலை விட மிக வேகமாக சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாதங்களை தொட்டு அதிகரிக்கவில்லை என்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. ஒரு பக்கம் நிம்மதியை கொடுத்தாலும், 5 மாநில தேர்தல்களை மனதில் வைத்தே பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றும் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications