ஒரு மாதமாக அதிகரிக்காத பெட்ரோல், டீசல் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா?
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்று செய்யப்படவில்லை. பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அதிகரிக்கப்படவில்லை.

மக்களை வாட்டும் பெட்ரோல் விலை
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சதத்தை கடந்து சென்றது. இடையில் ஒரு நாள் கூட விலை குறையாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சமையல் எண்ணெய் விலை உயர்வு வேறு அதிகரித்து மக்களை கடுமையாக வாட்டியது.

விலை குறைந்தது
இவ்வாறு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 28-ந்தேதி ஓய்வெடுத்தது. அன்று முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 24 நாட்களுக்கு பிறகு 2 நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையில் தலா 16 காசு குறைந்திருந்தது.

விலையில் மாற்றமில்லை
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசும், டீசல் லிட்டருக்கு 35 காசும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

என்ன காரணம்?
அதிவேகமாக சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாதங்களை தொட்டு அதிகரிக்கவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். 5 மாநில தேர்தல்களை மனதில் வைத்தே பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications