தேர்தல் முடியட்டும், கச்சேரி இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வது நிச்சயம்..? வெளியான முக்கிய ரிப்போர்ட்
சென்னை: உலக அளவில் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஹார்முஸ் வழித்தடத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பேரலுக்கு 100 டாலரை நெருங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 70 டாலர் அளவில் இருந்த விலை, போர் தீவிரமடைந்ததும் 120 டாலர் வரை உயர்ந்தது. இந்த ஏற்ற இறக்கம் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரணம் இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்து வருகிறது. இதனால் உலகளவில் ஏற்படும் விலை உயர்வு நேரடியாக இந்தியாவையும், இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம்
2022 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு மத்திய அரசு ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. ஈரான் போருக்கு பின்பு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீது வரியை உயர்த்தியது, இதேபோல் உயர் தர டீசல் மீதான விலை உயர்த்தப்பட்டது, விமான எரிபொருள் விலை கூட உயர்த்தப்பட்டது. ஆனால் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. இது நல்ல விஷயமாக தோன்றலாம், ஆனால் இது எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டமாக மாறியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாக காரணத்தால் பெரும் நஷ்டத்தில் உள்ளன.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 18 ரூபாயும், டீசலில் 35 ரூபாயும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்களின் தினசரி அடிப்படையில் சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டது. இதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு எரிபொருள் மீதான எக்சைஸ் வரியைக் குறைத்தது. இதன் பிறகு இந்த நஷ்டத்தின் அளவீடு 1,600 கோடி ரூபாயாகக் குறைந்தது. இந்த வரி குறைப்பு பலனை நுகர்வோருக்கு விலை குறைப்பாக அளிக்காமல், நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்பட்டது.
அரசின் சிக்கல்
மத்திய அரசுக்கு எரிபொருள் விற்பனை மூலமாக கிடைக்கும் வரிகள் அரசுக்கு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளன. அரசின் மொத்த வருமானத்தில் சுமார் 8 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்த வரிகளை முழுமையாக நீக்கினால் சுமார் 36 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்படும். இது அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும்.
மறுபுறம் விலையை உயர்த்தினால் பணவீக்கம் அதிகரிக்கும், பொதுமக்களின் அன்றாட செலவு உயரும். இந்த இரு பக்க சிக்கல்களுக்கு இடையே மத்திய அரசு சமநிலையை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மத்திய அரசின் தற்போதைய வரி குறைப்புக்கு பின்பும் மத்திய அரசு பெட்ரோலுக்கு 11.9 ரூபாயும், டீசலுக்கு 7.8 ரூபாயும் வரியாக வசூலிக்கிறது. இதை தாண்டி மாநில அரசுகள் விதிக்கும் வரி உள்ளது, இதில் எவ்விதமான மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
தேர்தல் போட்ட முட்டுக்கட்டை
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் காரணத்தால் மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருக்கிறது. தேர்தல் காலத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசு அஞ்சுகிறது. எனவே தற்காலிகமாக விலை உயர்வை தள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் நஷ்டத்தை ஈடுகட்ட விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என மெக்வாரி குழுமத்தின் அறிக்கை கூறுகின்றது.
இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கம்
கச்சா எண்ணெய் விலை உயர்வு எரிபொருள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை ஏற்கனவே 20 பில்லியன் டாலரை நெருங்கும் நிலையில் உள்ளது. எண்ணெய் விலை ஒவ்வொரு டாலர் உயர்வும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். பணவீக்கம் அதிகரிக்கும்.
அடுத்து என்ன நடக்கும்..?
தற்போதைய நிலைமை அரசியல் லாபத்திற்கும், பொருளாதார யதார்த்தத்துக்கும் இடையேயான சமநிலையை காட்டுகிறது. தேர்தல் காலத்தில் பொதுமக்களின் மனநிலையை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளன. இதனால் அடுத்த சில வாரத்தில், குறிப்பாக தேர்தல் முடிந்த பிறகு, எரிபொருள் விலை உயர்வு வர வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications