நாள் குறிச்சாச்சு.. ‘26’.. சசிகலாவை நோக்கி படையெடுக்கப்போகும் மாஜிக்கள்.. ‘திருப்பம்?’- ஃபைனல் வெடி!
சென்னை : சசிகலாவை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் அக்டோபர் 26ஆம் தேதிக்குப் பிறகு சந்தித்துப் பேசுவார்கள் என பரபரப்பைக் கிளப்புகிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.
அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையேயான மோதலுக்கு மத்தியில் சசிகலாவும் சுற்றுப்பயணம், ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை என அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறார்.
அண்மையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் தன்னுடன் பேசி வருவதாக சசிகலா கூறினார். முன்னாள் அமைச்சர்கள் எம்சி சம்பத், விஜயபாஸ்கர் போன்றவர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் சசிகலா தெரிவித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓ.பன்னீர்செல்வமே, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என திசை புரிபடாமல் திணறி வரும் நிலையில், சசிகலாவின் இந்த அதிரடி பரபர மூவ்களுக்கு என்ன காரணம் என சசிகலா ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்தோம்.

மீண்டும் லைம்லைட்
பெங்களூர் சிறையிலிருந்து வந்தது முதல் சசிகலா, எந்த நேரத்திலும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அப்படியான எந்த மூவ்களிலும் இறங்காத சசிகலா, சைலண்டாகவே காய்நகர்த்தி வருகிறார். இதனால், சசிகலா அரசியலை விட்டே ஒதுங்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், கடந்த நான்கைந்து மாதங்களாக, அதாவது ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சகட்டத்தை எட்டியது முதல் சசிகலாவும் லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். பல்வேறு மாவட்டங்களுக்கு தொண்டர்களைச் சந்திக்க புரட்சிப் பயணம், ஆதரவாளர்களுடன் ஆலோசனை, ஓபிஎஸ் தரப்பினருடன் ரகசிய பேச்சுவார்த்தை என அதிமுகவின் பரபரப்புகளுக்குள் பங்கெடுத்து வருகிறார்.

பிளான்கள் கப்சிப்
எடப்பாடி பழனிசாமி, இணைவுக்கு எதிராக முரண்டு பிடித்து வரும் நிலையில், ஓபிஎஸ் வெளிப்படையாகவே, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் இணைய வேண்டும் என்று அழைப்பை விடுத்தார். அப்போது முதலே, சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே, நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட சறுக்கல்களால், சசிகலாவும் ஓபிஎஸ்ஸை சந்திக்கும் முடிவுக்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்பட்டது. பொதுக்கூட்ட பிளான்களும் கைவிடப்பட்டன. இந்நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார் சசிகலா. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள். சில எம்.எல்.ஏக்கள் தன்னுடன் பேசி வருவதாகக் குறிப்பிட்டு பரபரப்பைக் கிளப்பினார் சசிகலா.

வழக்கத்தை விட உற்சாகம்
அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்தி ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை ஓவர்டேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் சசிகலா. இதற்காக, சமீபத்தில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையிலும் ஈடுபட்டார் சசிகலா. அப்போது, அதிமுக தோற்றுவிக்கப்பட்ட நாளான அக்டோபர் 17ஆம் தேதி முதல் நம் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனப் பேசியிருக்கிறாராம். அவ்வப்போது இதுபோல தனது ஆதரவாளர்களைச் சந்தித்து சசிகலா ஆலோசிப்பதும், திட்டங்களை வகுப்பதும் சகஜம் தான் என்றாலும், இந்த முறை சசிகலாவின் பேச்சில் கூடுதல் உற்சாகம் தெரிந்ததாம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சில முக்கிய புள்ளிகள் வெளிப்படையாகப் பேசுவார்கள் என்றும் சசிகலா கூறியுள்ளாராம். இதனால், அவரது ஆதரவாளர்களும் உற்சாகத்துடன் கிளம்பிச் சென்றுள்ளனர்.

நம்பிக்கைக்குக் காரணம் - அக்டோபர் 26
சசிகலாவின் நம்பிக்கை அதிகரித்திருப்பதற்குப் பின்னணி என்ன என்பது பற்றி, அவரது தீவிர ஆதரவாளர்கள் ஒரு முக்கியமான தகவலைச் சொல்கிறார்கள். அதாவது, தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் அக்டோபர் 26ஆம் தேதி வரவுள்ளது. இந்த வழக்கில், அவரைக் கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் முக்கியமான திருப்பம் ஏற்படும் என நம்புகிறாராம். இதற்கான திரைமறைவு வேலைகளில் சசிகலாவுக்கு நெருக்கமான புள்ளிகள் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே, முன்னை விட உற்சாகமாக சசிகலா திடீரென இறங்கி இருக்கிறார், அவசர ஆலோசனைகளை நடத்துகிறார் எனத் தெரிவிக்கின்றனர்.

என்ன வழக்கு?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்து பொதுக்குழு தீர்மானம் மூலம் ஒருங்கிணைப்பாளர்களானார்கள். பொதுச் செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரையும் கட்டுப்படுத்தும் என அவர் தரப்பு கூறியது. சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று சசிகலா மனு நிராகரிக்கப்பட்டது.

யு டர்ன் அடிக்கும் ஓபிஎஸ் ?
அந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தான் அக்டோபர் 26ல் விசாரணைக்கு வரவுள்ளது. சசிகலா முன்னர் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து தாக்கல் செய்த மனுவால் தான் சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இன்று இருவரும் பிரிந்துள்ளதால், மேல்முறையீட்டுக்கு வரும்போது ஓபிஎஸ் தரப்பும் தனியாக வாதம் வைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கக்கூடும். இதற்கான பேச்சுவார்த்தைகளில் சசிகலா ஈடுபட்டு, பாசிட்டிவ் சிக்னல் கிடைத்துள்ளதே இவ்வளவு நம்பிக்கையாக அவர் பேசுவதற்குக் காரணம் என்கிறார்கள்.

ஜேஜேன்னு இருக்கும்
சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெண்மதி, ஒரு தனியார் செய்தி தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், அக்டோபர் 26ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் சாதகமான தீர்ப்பு வரும். அதன்பிறகு சசிகலாவின் வீடு ஜேஜே என இருக்கும். ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியிடமிருந்து முக்கியமான ஆட்கள் வந்துகொண்டே இருப்பார்கள். சசிகலா சமீபத்தில் பேட்டியில் சொன்ன பெயர்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள் எனத் தெரிவித்துள்ளது, சசிகலாவின் கணக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
-
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!










Click it and Unblock the Notifications