உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றி செல்லாது.. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வழக்கு.. பரபரப்பு!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் உதயநிதி ஸ்டாலின்.

பெரிய வெற்றி
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. பாமக சார்பில் கஸாலி களமிறங்கியிருந்தார். தீவிர போட்டி சூழல் இருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது பம்பரமாக சுழன்று தனது தொகுதியில் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

வேட்பாளர் வழக்கு
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர், வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குற்ற வழக்குகள்
அந்த மனுவில் அவர் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அறிவிக்கவும் வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவில் பரபரப்பு
இந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி தேர்தல் வெற்றிக்கு எதிராக வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடரப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications