ப்ளீஸ், போலீசுக்கு போகாதீங்க.. மார்பில் கை வைத்து அழுத மனைவி.. அடக்கம் செய்த 20 நாளில் 2வது கல்யாணம்
சென்னை: கணவர் இறந்த 20 நாளில் அதே வீட்டில் இன்னொருவருடன் மணக்கோலத்தில் காணப்பட்டார் அந்த பெண்.. இந்த அவசரமான திருமணம்தான், பரமேஷின் மரணத்தின் மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.. ஒரு கள்ளக்காதல் ஜோடியின் பயங்கரமான கொலை சதியும் அம்பலமாகி உள்ளது.. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்? யாரிந்த பெண் ஆஷா?
கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது ஹெப்பூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர்தான் ஆஷா என்ற இளம்பெண்.. துமக்கூரு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவருக்கும், பரமேஷ் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது..

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி பரமேஷ் தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. தனது கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துவிட்டதாக ஆஷா, உறவினர்களுக்கெல்லாம் போனை போட்டு ஒப்பாரி வைத்தார்..
"போலீசுக்கு என் கணவர் இறந்ததை யாரும் சொல்லாதீங்க.. அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து கஷ்டப்படுத்துவார்கள்.. என் கணவருக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது.. உடனே உடலை அடக்கம் செய்துவிடலாம்" என்றெல்லாம் உறவினர்களிடம் அழுது உருகி பேசி பிடிவாதம் பிடித்தார்.
மனைவியின் சென்டிமென்ட் பேச்சு
இந்த சென்டிமென்ட்டை உண்மை என நம்பிய பரமேஷின் குடும்பத்தினரும், உறவினர்களும் எவ்வித சந்தேகமுமின்றி இறுதி சடங்குகளை முடித்து உடலை அடக்கம் செய்தனர்.. ஆனால், கணவர் இறந்து துக்கம் தாளாமல் இருக்க வேண்டிய ஆஷா, பரமேஷ் உயிரிழந்த வெறும் 20 நாட்களிலேயே தனது நண்பரான சந்திரப்பா என்பவரை அவசர அவசரமாக கல்யாணம் செய்து கொண்டார்..
இந்தத் திடீர் திருமணமும், கணவர் இறந்த சில நாட்களிலேயே ஆஷா காட்டிய அதீத அவசரமும் பரமேஷின் சகோதரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.. உடனே ஹெப்பூர் காவல் நிலையத்தில் பரமேஷின் சகோதரிகள் தங்களது சகோதரனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் புகார் அளித்தனர்..
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் புதைக்கப்பட்ட பரமேஷின் சடலத்தைத் தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

ஆஷாவின் பகீர் வாக்குமூலம்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், பரமேஷ் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.. அப்போதுதான் இது இயற்கையான மரணம் கிடையாது என்பது தெரிந்ததும், போலீசார் ஆஷா மற்றும் அவரது இரண்டாவது கணவரான சந்திரப்பாவை தங்களது பாணியில் விசாரித்தனர்.. அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன..
அதாவது ஆஷாவுக்கும் சந்திரப்பாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.. இது பரமேஷூக்கும் தெரிந்து, மனைவியை கண்டித்து வந்துள்ளார்.. இதனால் எரிச்சலடைந்த கள்ளக்காதல் ஜோடி, பரமேஷை தீர்த்துக்கட்டிவிட்டு இணைந்து வாழத் திட்டமிட்டனர்.. அதன்படி, ஜனவரி 29ம் தேதி இரவு பரமேஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆஷாவும் சந்திரப்பாவும் சேர்ந்து, தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சு விட முடியாமல் செய்து துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர்..
கல்யாண கோலத்தில் மனைவி
பிறகு விடிந்ததும் எதுவும் தெரியாதது போல மாரடைப்பு நாடகமாடி குடும்பத்தினரை நம்ப வைத்துவிட்டாராம் ஆஷா.. இவ்வளவும் வாக்குமூலத்தில் வெளிவந்ததையடுத்து, ஆஷா மற்றும் சந்திரப்பா ஆகிய இருவரையும் ஹெப்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கட்டிய கணவனையே கொலை செய்து, 20 நாளில் கல்யாண கோலத்தில் நின்ற பெண்ணின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications