“வெற்றித் திருநாள்”.. தீபாவளி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி, முதல்வர் ஜோசப் விஜய்!
சென்னை: தீபாவளி பண்டிகையொயொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர், மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தீபாவளித் திருநாள், நாளை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள சக குடிமக்களே, தீபாவளி எனும் இந்த மங்களகரமான நாளில் எனது அன்பான வாழ்த்துக்கள். இந்தப் பண்டிகை இருளை வென்ற ஒளியின், தீமையை வென்ற நன்மையின், மற்றும் விரக்தியை வென்ற நம்பிக்கையின் வெற்றியை குறிக்கும் சிறப்பான திருநாளாகும்.
தீபாவளி என்பது இந்தியாவின் வளமான பாரம்பரியங்களைப் போற்றுவதற்கும், ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பம். தீபாவளி ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் செழிப்புடன் ஒளிரச் செய்யட்டும். இந்தப் பண்டிகை காலம், கருணையைப் பரப்பவும், நேர்மறை எண்ணங்களைத் தழுவவும், மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி உழைக்கவும் நம்மை ஊக்குவிக்கட்டும்.
Have a great Diwali! https://t.co/YbFVq7tHmx
— Narendra Modi (@narendramodi) November 7, 2026
வளமான மற்றும் 'விக்ஷித் பாரத்'தை உருவாக்க, அனைவரும் புது ஆற்றலுடனும் உறுதியுடனும் முன்னேற வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து
தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில், "மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!#CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 7, 2026
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக
தீபாவளிப் பண்டிகையின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக தலைமை சார்பில் இதுவரை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது இல்லை. இதனால் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்துக்களை மட்டும் வெறுப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கட்சித் தலைவராக இல்லாமல் முதல்வராக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும், ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளிலுமே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை விடவில்லை.
பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்டுள்ளது தவெக. எனினும், தவெக கட்சி தொடங்கப்பட்டது முதலே தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் விஜய்.


Click it and Unblock the Notifications
