''முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்''.. பிரதமர் மோடியின் சூப்பர் ட்வீட் .. உற்சாகத்தில் திமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரியணையில் அமர்ந்து விட்டது.

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று எளிய முறையில் பதவியேற்றுக் கொண்டார். 33 புதிய அமைச்சர்களும் இன்று பதவிஏற்றுக் கொண்டனர். ஸ்டாலின் முதல்வராகி விட்டதால் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PM Modi has congratulated MK Stalin on taking over as the Chief Minister of Tamil Nadu

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கடந்த 2-ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். ''தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், கொரோனா தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று மோடி கூறி இருந்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்ற நிலையில் பிரதமர் மோடி அவருக்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பதிவில், ' தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக நெட்டிசன்கள் பலர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+