சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டின் 5வதாக.. சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில்.. பெங்களூரில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை பெங்களூரில் பிரதமர் மோடி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே துறை உள்ளது. நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்சேவையை பயன்படுத்துகின்றனர்.

பாதுகாப்பான பயணம், விரைவு, சொகுசு என பல்வேறு வசதிகள் இருப்பதால் ஏழை மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்களுக்கும் விருப்பமான பயணமாக ரயில் பயணம் தான் அமைகிறது.

ஜி20 நாடுகள் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.. நவ.14-ல் இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி ஜி20 நாடுகள் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.. நவ.14-ல் இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி

சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத்

சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத்

ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே அளித்து வருகிறது. அந்த வகையில், முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 5-வது ஆக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

 6 நாட்கள் இயக்கம்

6 நாட்கள் இயக்கம்

பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் காட்பாடி வழியாக பெங்களூர் சென்று மைசூருவை அடையும். இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். புதன்கிழமையை தவிர்த்து வாரத்தில் மீதமுள்ள 6 நாட்களும் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

ஹாட்ஸ்பாட் வைஃபை

ஹாட்ஸ்பாட் வைஃபை

இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். ஆட்டோமெட்டிக் கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான ஆடியோ விஷுவல் தகவல் மையம், ஹாட்ஸ்பாட் வைஃபை, சொகுசு இருக்கைகள் என பல்வேறு நவீன சொகுசு வசதிகளை இந்த ரயில் கொண்டதாகும். ஒவ்வொரு கோச்சிற்கும் தனித்தனியான பேண்ட்ரி வசதியும் உள்ளது.

ரயில் சேவையை தொடங்கி வைத்தார்

ரயில் சேவையை தொடங்கி வைத்தார்

ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று பெங்களூரு வந்த பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நேரடியாக சென்னை செல்கிறது. முதல் நாளை யொட்டி இந்த ரெயில் பெங் களூரு - சென்னை இடையே 43 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

முன்பதிவு தொடக்கம்

முன்பதிவு தொடக்கம்

12-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் இந்த ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும். நண்பகல் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. காட்பாடி ரயில் நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்லும். மைசூருவில் இருந்து 1.05 மணிக்கு புறப்படும் ரயில் சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேரும்.இந்த வந்தே பாரத் ரயில் 504 கி. மீட்டர் தொலைவை 6.5 மணி நேரத்தில் கடக்கும் என்று தெரிகிறது

English summary
Vande Bharat train will run from Chennai to Mysore via Bengaluru from today. Prime Minister Modi inaugurated this Vande Bharat train in Bangalore this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X