கோல்வால்கர் கனவை நனவாக்க முயலும் பிரதமர் மோடி.. ஒரே காவல் சீருடை திட்டத்தை எதிர்க்கும் எஸ்டிபிஐ
சென்னை: 'ஒரே தேசம், ஒரே காவல் சீருடை' என்பது கூட்டாட்சிக்கு கேடு விளைவிக்கும். இது கோல்வால்கர் கனவு கண்ட ஒற்றை தேசத்தை உருவாக்குவதன் ஒரு பகுதியாகும். இது நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடும். இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்கே பைஸி கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.
சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047யை அமல்படுத்தும் வகையில் சிந்தனை முகாம் என்ற பெயரில் மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நடந்தது.
இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛அரசியல் சாசனப்படி சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதையுமே குறிக்கிறது. மத்திய அரசு - மாநில அரசுகளுக்கு இடையேயும் முழுமையான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம். தீவிரவாதத்திற்கு எதிராகவும், நிதி மோசடி குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார். மேலும் நாடு முழுவதும் இந்திய போலீஸ் படைகளுக்கு "ஒரே நாடு, ஒரே சீருடை" என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார்.

எஸ்டிபிஐ அறிக்கை
இந்நிலையில் ஒரே தேசம் ஒரே காவல் சீருடை திட்டத்தை முன்னெடுக்க எஸ்டிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்கே பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் நடைபெற்ற சிந்தனை முகாம் (சிந்தன் ஷிவிர்) நடந்தது. இந்த முகாமில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பேசினர்.

ஒற்றை தேசத்தை உருவாக்க..
'ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை' என்ற தனது எண்ணத்தை வெறும் 'சிந்தனை' என்று பிரதமர் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த 'சிந்தனை' கோல்வால்கர் கனவு கண்ட ஒற்றை தேசத்தை உருவாக்குவதன் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. அந்த கனவை அதன் நூற்றாண்டு பிறந்தநாளில் நிறைவேற்ற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ன் திட்டமாகும். இருப்பினும், இந்த 'சிந்தனை' தேசத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும்.

மாநில உரிமைகளை பறிக்கும்
நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை உடைத்து, காவல்துறையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட சிந்தனை இதுவாகும். மேலும், இது கூட்டாட்சியில் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும், அவர்களின் அதிகாரத்தை அபகரிக்கும். மாநில பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி, மாநிலத்தின் சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளை பறிக்கும் என அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத வழக்குகள்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மற்றொரு மோசமான அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை பயங்கரவாத வழக்குகளை கையாள்வதற்கு அவர் முன்மொழிகிறார். மேலும், எல்லையற்ற குற்றங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கையாள்வதில் ஒன்றியத்துடன் கைகோர்க்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு அச்சுறுத்தல்
நாடு முழுவதும் என்ஐஏ கிளை அமைப்பது, 'ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை' என்ற பிரதமரின் 'சிந்தனைக்கு' துணையாக உள்ளது. பயங்கரவாத வழக்குகள் மற்றும் தேசத்துரோக வழக்குகளை விசாரிக்க உருவாக்கப்பட்ட என்ஐஏ, ஏற்கனவே ஒன்றிய அரசால் சங்கபரிவாரம் மற்றும் அதன் ஆட்சிக்கு ஒத்துவராதவர்களுக்கு எதிரான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை உருவாக்குவதற்கான முன்மொழிவு கூட்டாட்சி அமைப்புக்கு மற்றொரு அச்சுறுத்தலாகும்.

சங்க பரிவாரால் தொடக்கம்
மேலும் இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த காவல்துறையையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான தெளிவான செய்தியாகும். பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பாஜக ஆதரவு ஊடகங்களில் அவ்வப்போது மிகைப்படுத்தப்பட்ட கூச்சல்கள் இருந்தபோதிலும், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பதிவாகியுள்ள பயங்கரவாதச் செயல்கள் அனைத்தும் சங்க பரிவாரங்களால் தொடங்கப்பட்டவையே.

ஜனநாயக விரோத போக்கு
ஆகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்த, ஒன்றிய அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications