ரேசன் கடை க்யூவில் நின்றால் இனி போரடிக்காது..வரப்போகுது வைபை..கட்டணம் எவ்ளோ தெரியுமா
ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் செல்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை எடுத்து வந்து இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சென்னை: நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பி.எம் வாணி எனும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது.
பொதுவாக ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால், குறைந்தபட்சம் அவர்களிடம் 6 செல்ஃபோன் எண்களாவது உள்ளன. அதன்படி பெரும்பலானோர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ் அப், ஜி பே, போன்ற ஆன்லைன் செயலிகளையும் பயன்படுத்துகின்றனர். நகர்புறங்களில் இருப்பவர்கள் எளிதில் இணையவசதி பெற முடிகிறது. ஆனால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இணைய வசதி கிடைப்பதில்லை.

ரேசன் கடைகளில் வைபை
இதற்காக ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் இடத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரேஷன் கடைகள் அமைந்திருக்கிறது.

பி.எம் வாணி
இதில் பி.எம் வாணி திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகளை , இணைய சேவை வழங்கும் பொது தரப்பு மையமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கடந்த மே மாதம், கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

வைபை வசதி
இதனையடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, தற்போது அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வைபை வசதி ஏற்படுத்தி அந்த கடைக்கு அருகில் வசிப்போருக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

கட்டணம் உண்டு
ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் செல்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை எடுத்து வந்து இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம் ரேஷன் கடைகளில் வைஃபை பயன்படுத்துவோர் , இதற்காக ரேஷன் கடைகளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

வருமானம் கிடைக்கும்
இதன்மூலம் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கும் வருவாய் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதிக இடவசதியுடன், சொந்த கட்டிடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications