பாமக, தேமுதிக இந்த ஒரு விஷயத்தில் அவ்வளவு ஒற்றுமை .. மிரளும் அதிமுக, பாஜக
சென்னை: பாமக, தேமுதிக இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடம் இந்த கட்சிகள் வைக்கும் அந்த ஒரு டிமாண்ட் தான் பேசு பொருளாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 3 மாதத்தில் நடக்க போகிறது. அனேகமாக ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019ம் ஆண்டிலும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2024ம் ஆண்டிலும் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்..

10 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னரும் அசுர பலத்துடன் பாஜக இருக்கும் நிலையில், அதை எதிர்க்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் தேர்தலுக்கு பின்பான கூட்டணிக்கே வாய்ப்பு என்கிற நிலை இந்தியா கூட்டணியில் நிலவுகிறது. இதனால் நேருவுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக பிரதமராகும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த முறை மொத்தம் உள்ள 39 இடங்களில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒரே ஒரு இடத்தில் அதிமுக வெற்றி பெற்றது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ள அதிமுக , வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதேநேரம் தமிழகத்தில் ஆளும் கட்சி கூட்டணியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகியவை உள்ளன,
பாஜக கூட்டணியை பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் வாசன் + புதிய நீதி கட்சி ஆகியவை கூட்டணியில் உள்ளன. அமமுக கூட்டணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. இதேபோல் அதிமுக ஓபிஎஸ் அணி, புதிய தமிழகம் ஆகியவை பாஜக கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் தேமுதிக, பாமகவை பாஜக கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் பாமகவிடம் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
பாஜக கூட்டணியில் சேர பாமக, 12 லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாஜக 7 இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரும் நிலையில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 22 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே பிரேமலதா தலைமையிலான தேமுதிகவை பொறுத்தவரை பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிக 4 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
பாமக தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளுமே நாடாளுமன்ற தொகுதிகளை தாண்டி, ராஜ்யசபா சீட்டும் கேட்பதில் ஒற்றுமையாக உள்ளன. இதனிடையே அதிமுகவும் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 6 சீட் தர அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிக பாமக இரண்டுமே ராஜ்யசபா சீட்டில் உறுதியாக உள்ளதால் எந்த கூட்டணியில் அதற்கு வாய்ப்பு உள்ளதோ அங்குதான் இவை கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications