சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாதம் 1000 ரூபாய்! புதுச்சேரியில் சொல்லிட்டங்க.. தமிழ்நாட்டில் எப்போ? திடீர் கோரிக்கை வைத்த அன்புமணி

Google Oneindia Tamil News

சென்னை : புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டபேரவையில் 2022-2023ம் ஆண்டிற்கான ரூ.10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.

அப்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகைஇலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகை

 ரூ.1000 உதவித்தொகை

ரூ.1000 உதவித்தொகை


இந்நிலையில் புதுச்சேரியில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"புதுவையில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமுதாய மேம்பாடு

சமுதாய மேம்பாடு

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இது மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக அரசுக்கு கோரிக்கை


புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

English summary
PMK Leader Anbumani Ramadoss has urged that the Tamil Nadu government should release the notification regarding the women's right amount without further delay ; இனியும் காலம் தாழ்த்தாமல் பெண்களுக்கான உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X