Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ கன்னியாகுமரி! ‘அன்புடன் அன்புமணி’.. பாமகவின் பக்கா பிளான்! கிராமம் கிராமமாக செல்ல முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த பயணத்தின் போது வன்னியர் சங்கம் முதல் தற்போது பாமக வரை இருக்கும் மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து மக்களவை தேர்தலுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Anbumani Ramadoss புது திட்டம் | Chennai To Kanyakumari பயணம் ஆரம்பம் | #Politics

    பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்த ஜிகே மணி, கட்சியின் எதிர்கால நலன் கருதி கௌரவத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்..

    கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் கட்சியை மறுபிசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக பொறுப்பினை ஏற்றுக் கொண்டதாக பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறினர்.

    பாமக 2.0

    பாமக 2.0

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை அப்போது தலைவராக இருந்த ஜிகே மணியே வாசித்தார். அதில் கட்சியின் எதிர்கால நலன் கருதி தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இளைஞரணித் தலைவராக இருந்தபோதும் சரி தற்போது தலைவராக இருக்கும் போதும் சரி அன்புமணி ராமதாஸ் பாமக 2.0 என்ற திட்டத்தை அடிக்கடி சொல்லி வருகிறார்.

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    அதாவது கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும், திமுக அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல திட்டங்கள் அன்புமணி ராமதாசிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்தும் நோக்கில் வன்னியர் சங்க காலம் முதல் பாமகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தற்போது கட்சியில் இணைந்து உள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை புதிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

    சுற்றுப் பயண திட்டம்

    சுற்றுப் பயண திட்டம்

    தற்போது பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்து வரும் அவர், அதற்குப் பின்னராக இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை மேற்கொள்ளலாம் என பாமக நிர்வாகிகள் கூறியுள்ளனர். கட்சியில் யாரையும் விட்டு தர கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் அன்புமணி ராமதாஸ் இதற்காகவே இந்த திட்டத்தை முன்னெடுத்து இருப்பதாகவும் கடந்த காலங்களை கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒன்றிணைத்து பாமகவை வலுப்படுத்தவே இந்த சுற்றுப் பயணம் என்று கூறப்படுகிறது.

    சஸ்பென்ஸ் திட்டம்

    சஸ்பென்ஸ் திட்டம்

    மேலும் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போதும் குறிப்பிட்ட அளவில் அதிக இளைஞர்களை கட்சியில் இணைய வைக்க வேண்டும் எனவும் இந்த பயணத்திட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சுற்றுப் பயணங்களை ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் செய்திருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்புமணி ராமதாஸ் அதில் என்ன புதுமையை புகுத்த போகிறார் என்பது மட்டும் சஸ்பென்ஸ் என புள்ளி வைத்து முடித்துக் கொண்டனர் நம்மிடம் பேசிய பாமக நிர்வாகிகள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+