1 ரூபாய் கூட கொடுக்காத பாமக..அதிமுக ஓட்டு திமுகவுக்கு! ’ஜெ’ இருந்தா இப்படி நடக்குமா? ஆவேச அன்புமணி!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணம் பரிசுப் பொருட்கள் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற்றிருந்தால் திமுக டெபாசிட் கூட வாங்கி இருக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணப்படும் போதே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார்.

அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் ஏறக்குறைய 3 3 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலை பெற்ற அவர், 1,23,688 வாக்குகள் பெற்று பாமக வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,248 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளும் பெற்றனர். இதில் சி.அன்புமணியை தவிர போட்டியிட்ட நாம் தமிழர் அபிநயா உள்ளிட்ட அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற்றிருந்தால் திமுக டெபாசிட் கூட வாங்கி இருக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," பாமக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் எவ்வளவு வாக்குகளை பெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. திமுக 250 கோடி ரூபாய் இந்த இடை தேர்தலுக்காக செலவு செய்துள்ளது. 33 அமைச்சர்கள் களத்தில் இருந்தார்கள், இது தவிர 30க்கும் மேற்பட்ட எம்.பி.கள் , நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் அங்கே முகாம் இட்டு இருந்தனர்.
திமுக சார்பில் பட்டுப் புடவைகள் மூக்குத்தி கம்மல் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து தான் திமுக வாக்கு பெற்றது. இந்த விஷயங்கள் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என்பது வெட்கக்கேடு. இப்படி ஒரு தேர்தல் ஆணையம் தேவையா? தேர்தல் ஆணையத்திற்கு எதற்காக ஒரு அலுவலகம்? எதற்காக சம்பளம்? எதற்காக துணையாக எவ்வளவு அதிகாரிகள்? விக்கிரவாண்டியில் திமுக சார்பில் பணம் பரிசுப் பொருட்கள் கொடுக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் தெரியவில்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து முதலமைச்சர் பெருமைப்படுகிறார். இதெல்லாம் ஒரு பெருமையா? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? அந்த தொகுதி மக்களை நான் குறை சொல்லமாட்டேன் ஏனென்றால் விக்கிரவாண்டி தொகுதி தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய தொகுதி. விழுப்புரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் அங்கு வேலைவாய்ப்பு கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவினர் ஒருவர் கூட திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள்.
திமுகவினருக்கு திமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் அதிமுக வாக்குகளும் திமுகவிற்கு சென்றுள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆதலால் இந்த தேர்தலை வைத்து வரும் சட்டமன்றத் தேர்தலை ஒப்பீடு செய்வது சரியாக இருக்காது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணம் பரிசுப் பொருட்கள் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற்றிருந்தால் திமுக டெபாசிட் கூட வாங்கி இருக்காது . இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் அதிமுக வாக்குகளும் திமுகவிற்கு சென்றுள்ளது.ஜெயலலிதா இருந்தபோது இவ்வாறு நடைபெற்றது இல்லை..பாமகவின் பிரச்சாரத்திற்காக தீவிரமாக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி" என்றார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications