எங்களின் இலக்கு அதுதான்.. தவெக அமைச்சரவையில் பாமக பங்கேற்குமா? சௌமியா அன்புமணி பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அமைச்சரவையில் பாமக பங்கேற்கும் சூழல் இல்லை என்று அக்கட்சியின் எம்எல்ஏ செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய இடத்திலேயே பாமக இருக்கும் என்று கூறிய அவர், இதனை விடுத்து அமைச்சரவையில் இணைவது தொடர்பாக எந்த யோசனையும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது தவெக அமைச்சரவையில் பாமக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல், நடுநிலை வகித்தது. இதனால் பாமகவின் வாக்குகள் தவெக பக்கம் திரும்பின. அதேபோல் அதிமுக - பாமக இடையிலான உறவும் சிக்கலுக்கு உள்ளானது.

Sowmiya Anbumani

சரியான நேரத்தில் பாமக காலை வாரிவிட்டதாக அதிமுகவினர் விமர்சிக்க தொடங்கினர். அதேபோல் பாமக - தவெக இடையிலான நெருக்கமும் அதிகரித்தது. ஆனால் விசிக தரப்பில் தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், நாங்கள் வெளியேறுவோம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தவெக - பாமக இடையிலான பேச்சுகள் குறைந்தது.

இந்த நிலையில் பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாமக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் தவெக அமைச்சரவையில் பாமக பங்கேற்கும் சூழல் இல்லை. பொறுப்புள்ள கட்சியாக ஆளுங்கட்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மட்டுமே வழங்குவோம்.

அதனை விடுத்து அமைச்சரவையில் இணைவது குறித்த எந்த யோசனையும் எங்களிடம் இல்லை. வலிமையான எதிர்க்கட்சியாக பணி செய்வதே எங்களின் முதல் குறிக்கோள். அதேபோல் தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சி பெற்ற பெண்களை காவல்துறை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், சிங்கப்பெண் படை மேலும் வலிமை அடையும்.

இதுதொடர்பாக ஏற்கனவே தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறோம் என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில் தவெக அமைச்சரவையில் இடம்பெறும் சூழல் இல்லை என்றாலும், 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் பாமக இணையும் சூழல் வரலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+